கிருஷ்ணகிரி பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம்..!! சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!!
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தனியார் பள்ளியில், கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி என்சிசி (NCC) பயிற்சிக்காக வெளியூர் முகாமிற்கு அப்பள்ளி மாணவிகள் 17 பேர் கலந்து கொண்டனர். அந்த முகாமில் மாணவர்களை அழைத்து சென்ற பேருந்து வாகன ஓட்டுனரும் நாம் தமிழர் கட்சியன் நிர்வாகியுமான சிவராமன் (வயது 35) அப்பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்..
இந்த சம்பவம் குறித்து அந்த மாணவி தன்னுடைய வகுப்பு ஆசிரியரிடம் தெரிவித்துள்ளார்.. வகுப்பு ஆசிரியர் தலைமை ஆசிரியரிடம் கூறியுள்ளார்.. தலைமை ஆசிரியர் அளித்த புகாரின் பேரில் காவலர்கள் சிவராமனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்..
அந்த விசாரணையில் 13 மாணவிகள் பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கப் பட்டிருப்பது தெரிய வந்தது., அதன் பின் சிவராமன் உள்பட 11 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். சிவராமன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்ததும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.. இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.. தன்னை பற்றிய உண்மை தமிழகம் முழுவதும் தெரிந்ததால் சிவராமன் கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி எலிமருந்தை சாப்பிட்டு உயிர் இழந்தார்..
இந்நிலையில் கிருஷ்ணகிரியில் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு 2 வாரங்களில் கருணைத் தொகை வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதிகப்பட்ட மாணவிகள் 23 பேரில் இருவருக்கு தலா 5 லட்சம் ரூபாயும், மற்றவர்களுக்கு தலா 1 லட்சமும் ரூபாயும் வழங்க உத்தரவிட்டுள்ளது.. கருணைத்தொகையை சம்பந்தப்பட்ட பள்ளியிடம் இருந்து வசூலித்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..