“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” கொடைக்கானல் சுற்றுலா தளம்..!!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பெரியபேட்டை பகுதியை சேர்ந்த கேசவக்குமார் என்பவர் வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகில் பூமாலை வாங்க கையை நீட்டியபோது அவரது சட்டை பையில் வைத்திருந்த ரூபாய் 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சாம்சங் நிறுவன கைபேசியை மர்ம நபர் நூதன முறையில் திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பித்தார். இதன் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை அடுத்த நாகமங்கலம் கிராமத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” முகாமில் மாவட்ட ஆட்சியர் 24 மணி நேரம் தங்கி ஆய்வு நடத்துகிறார். இதன் காரணமாக ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்கம் மையம் மற்றும் விதை பண்ணைகளில் ஆய்வை தொடங்கிய மாவட்ட ஆட்சியர் அங்குள்ள விதை பண்ணையில் விதை மூட்டைகளை அணில் மற்றும் பறவைகள் சேதப்படுத்துவதை தடுக்க உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய அறிவுறுத்தினார்
மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி :
ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் தூய்மை சேவை திட்டம் மூலம் முதல் கட்டமாக சோளிங்கர் ஒன்றியத்திற்குட்பட்ட காட்ரம்பாக்கம் ஊராட்சியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் உமா தலைமை தாங்கினார். மேலும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாபு, ஒன்றிய பணி மேற்பார்வையாளர் தாஜ் ஜூதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல் பகுதி சுற்றுலா தளமாக இருப்பதால் சுற்றுலா பயணிகள் அதிகமாக வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி பலரும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் காவல் கண்காணிப்பாளர் பிரதீப் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதனைதொடர்ந்து காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அனைத்துதுறை அதிகாரிகள் இடையே ஆலோசனை கூட்டமும் நடைபெற்றது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..