துளி கூட மனசாட்சி இல்லை..! இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா..? இயக்குனர் மோகன் ஜீ சரமாரியாக கேள்வி..!!
திருப்பதியில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில் செய்யப்படும் நெய்யில் மாட்டுக்கொழுப்பு, மீன் எண்ணெய்., சேர்க்கப்பட்டது பரிசோதனையில் உறுதியானது.. எப்படி துளிகூட மனசாட்சி இல்லாம இத்தனை கோடி மக்களின் நம்பிக்கையோட விளையாட முடியுது.. இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்கள்.” என இயக்குநர் மோகன் ஜி தெரிவித்துள்ளார்…
ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி திருப்பதி கோவிலின் புனிதத்தைக் கெடுத்துவிட்டார்கள்., மக்களுக்கு பிராசதமாக கொடுக்கப்படும் திருப்பதி லட்டில் நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தி அதை அசுத்தப்படுத்தி இருக்கிறார்கள் அது அவதூறான செயல் என தெரிந்தும் இப்படி ஒரு வேலையை அவரால் எப்படி செய்ய முடிந்தது..
முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு முன்வைத்துள்ள இந்த குற்றச்சாட்டுகளை ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி எம்.பி சுப்பா ரெட்டி, “சந்திரபாபு நாயுடு திருப்பதி ஏழுமலையான் கோவிலின் புனிதத்தை அசுத்த படுத்தியதோடு பல நூறு கோடி இந்துக்களின் நம்பிக்கையையும் உடைத்துள்ளார்கள்..
சந்திரபாபு நாயுடு தன்னுடைய அரசியலை காட்டுவதற்காக எந்த ஒரு மோசமான வேலையையும் செய்ய தயங்க மாட்டாரு சொல்லுவாங்க.., அது இப்போ லட்டு விஷயத்தில் உறுதியாகி விட்டது.. இந்நிலையில், திருப்பதி கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கப்படும் லட்டுவில் பயன்படுத்தப்பட்டுள்ள நெய்யை சோதனை செய்வதற்காக குஜராத்தில் உள்ள திருப்பதி தேவஸ்தான அய்வகத்திற்கு அனுப்பியது
அதில் மாட்டுக் கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் கலந்திருப்பது ஆய்வ அறிக்கையில் உறுதியானது.. குஜராத்தில் உள்ள தனியார் ஆய்வகம் வெளியிட்ட பரிசோதனை அறிக்கையின் படி, திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யின் மாதிரிகளில் பாமாயில், மீன் எண்ணெய், மாட்டுக் கொழுப்பு மற்றும் பன்றிக் கொழுப்பு உள்ளிட்ட கொழுப்புகள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி லட்டில் இதுபோன்ற எண்ணெய் மற்றும் நெய் கலக்கப்பட்டிருப்பது., உறுதியான தகவல்கள் வெளியானது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது., கோவில் பிரசாதமான லட்டுவில் விலங்கு கொழுப்பு உபயோகப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்… இதற்கு ஆந்திரா மக்கள் மட்டுமின்றி உலகெங்கும் உள்ள அனைத்து இந்து மக்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்..
இதுகுறித்து இயக்குநர் மோகன் ஜி தனது எக்ஸ் வலைதளம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.. அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது “எப்படி துளி கூட மனசாட்சி இல்லாம இத்தனை கோடி மக்களின் நம்பிக்கையை உடைக்க முடியும்.. பக்தர்களின் நம்பிக்கையோடு விளையாடி இருக்குறீங்க.. வைணவ முத்திரை வாங்கியவர்கள் எத்தனை லட்சம் பேர் புனிதமாக வாழ்ந்து வருகிறார்கள்..
இந்த அவல செயலில் ஈடுபட்டவர்கள் மீது கொடுரமான தண்டனை வழங்க வேண்டும் இதைச் செய்த கொடிய மிருகங்களுக்கு.. இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்கள்.” எனக் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
தமிழில் பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ரதாண்டவம் போன்ற படங்களை இயக்கியவர் மோகன் ஜி. அரசியல் தொட்ரபாக அவ்வப்போது கருத்து கூறி வருகிறார். மோகன் ஜி, சாதின் கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் படம் எடுப்பதாக விமர்சிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..