சென்னையே இப்போ இப்படி தான் இருக்கு..!!
நேற்று நள்ளிரவு முதல் பெய்து வரும் தொடர் கனமழையால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது..
கடந்த சில நாட்களாகவே சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.. தென்மேற்கு பருவக்காற்று தீவிரம் அடைந்துள்ள நிலையில் இன்னும் இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்திருந்தது..,
அதன் படி நேற்று இரவு முதல் சென்னையின் பல்வேறு பகுதிகளில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்து வருகிறது.. மற்றும் சென்னையின் புறநகர் பகுதிகளில் உள்ள சாலையில் மழைநீர் தேங்கியுள்ளது.. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்…
மற்றும் கோவை, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் ஆகிய 14 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது..
அதேபோல் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மற்றும் நாகை மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.. குறிப்பாக சென்னையில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இன்றும் நாளையும் 7செமீ முதல் 11 செமீ வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வுமையும் தெரிவித்துள்ளது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..