கணவனை கொலை செய்ய மனைவி மாஸ்டர் பிளான்..!! 7பேர் போலீசில் சிக்கியது எப்படி..?
தருமபுரி மாவட்டம் தொப்பூர் அருகே கணவனை திட்டம் தீட்டி கொலை செய்த விவகாரத்தில் மனைவி, மகன் மற்றும் மருமகன் உட்பட 7 பேரை காவல்துறை கைது செய்து சிறையில் அடைப்பு. இந்தக் கொலைக்கு தொடர்புடைய இரண்டு முக்கிய குற்றவாளி இருவரை தனிப்படை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே தண்டுகாரன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மார்கண்டன். இவரது மகன் சிவபிரகாசம் (47). இவருக்கு திருமணமாகி பொன்னுருவி என்ற மனைவியும், நித்யா, சந்தியா, ரம்யா ஆகிய 3 மகள்களும் நந்தகுமார் என்ற மகன் உள்ளனர். இந்த நிலையில் சிவபிரகாசம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து வருகிறார்..
இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் வீட்டிற்கு வந்திருந்த சிவப்பிரகாசம் நேற்றுக்கும் முன்தினம் வீட்டின் அருகே உள்ள சென்றாய பெருமாள் கோவில் பின்புறம் உள்ள புதரின் அருகே ஒரு கை மட்டும் கட்டப்படடு கத்தியால் குத்தப்பட்ட நிலையில் பலத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். இச்சம்பவம் குறித்து தொப்பூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஷ்வரன் மற்றும் தொப்பூர் காவல் துறையினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது சிவபிரகாசத்தை மர்ம நபர்கள் யாரோ சிலர் கத்தியால் குத்தி கொலை செய்து பின்னர் ஒரு கையை கயிற்றால் கட்டி சுமார் 200 மீட்டர் தொலைவிற்கு இழுத்து சென்று புதரில் வீசி விட்டு தப்பி சென்றது தெரிய வந்தது.
அதனைதொடர்ந்து காவல் துறையினர் சிவபிரகாசத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சிவப்பிரகாசத்தின் வீட்டின் அருகே நடந்திருப்பதால் சந்தேகத்தின் பெயரில் மனைவி பொன்னுருவி 37, மற்றும் மருமகன் சிவக்குமார் 28, ஆகிய இருவரை போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்ததில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
சிவப்பிரகாசத்தில் இரண்டு மகள்களான நித்தியா, சந்தியாவிற்கு திருமணம் முடிந்தள்ளது. தந்தை சிவப்பிரகாசம் குடித்துவிட்டு வீட்டில் ரகலையில் ஈடுபடுவதும் நிறைய பெண்களுடன் தகாத உறவு இருந்துள்ளது. இதனால் மகள் நித்தியா திருமணம் ஆனதிலிருந்து ஆறு வருடங்களாக தாய் வீட்டிற்கு வருவதில்லை இரண்டாவது மகள் சந்தியாவின் கணவர் மூன்று மாதங்களுக்கு முன்பு மாமனார் வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது நடந்த தகராறில் அவர்களும் மூன்று மாதமாக மாமனார் வீட்டிற்கு வருவதில்லை. மருமகன் சிவக்குமார் ஒரு மாதத்திற்கு முன்பு மாமியாரை பார்க்க வீட்டிற்கு வந்தபோது மாமனார் தகாத உறவில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த மனைவி பொன்னுருவி அவனை உயிரோடு விட்டு வைக்கக் கூடாது என தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் கணவர் சிவகுமார் உடன் ஓசூரில் வேலை செய்யும் பாளையம்புதூரைச் சேர்ந்த நண்பர் சிவப்பிரகாசத்தின் மனைவியிடம் உன் கணவர் ஓசூரில் மற்றொரு பெண்ணுடன் தகாத உறவில் ஈடுபட்டு வருவதாகவும் தனி வீடு எடுத்து குடும்பம் நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த பொன்னுருவி தனது மருமகன் சிவக்குமாரை வரவழைத்து. சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார்.
சிவக்குமார் தருமபுரியில் வெல்டிங் தொழில் செய்து வருவதால் கடையில் உள்ள தனது நண்பர் பிரபுவிடம் தெரிவித்துள்ளார். பிரபு நண்பர்களான எம்ஜிஆர் நகரை சேர்ந்த திருப்பதி மற்றும் முல்லைவேந்தன், முகிலரசு மற்றும் எம்ஜிஆர் நகரை சேர்ந்த இரண்டு பேர் ஆகிய ஏழு பேர் சேர்ந்து திட்டம் தீட்டியுள்ளனர்.
இதில் கொலை செய்வதற்கு மூன்று லட்ச ரூபாய் பேரம் பேசி முன்பணமாக பத்தாயிரம் ரூபாய் சிவக்குமார் கொடுத்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் உறவினரின் சடங்கிற்கு வந்த சிவப்பிரகாசம் இரவு மது அருந்திவிட்டு வீட்டில் தூங்கச் சென்றபோது மனைவி பொன்னுருவி வெளியே சென்று தூங்கச் சொல்லி உள்ளார்.
இதனை அடுத்து சிவப்பிரகாசம் வீட்டுக்கு வெளியே வந்து படுத்து நல்ல உறக்கத்தில் இருந்தபோது திட்டப்படி ஏழு பேரும் சிவப்பிரகாசத்தை கத்தியால் இதயத்தில் குத்தி கொலை செய்துள்ளனர். பின்னர் துணியால் கையை கட்டி 200 மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் சென்று புதரின் அருகே விட்டு சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது..
இதனை அடுத்து எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த திருப்பதி 27, பிரபு 28, வெள்ளக்கல் பகுதியைச் சேர்ந்த முகிலரசு 23, முல்லைவேந்தன் 28, ஆகிய நான்கு பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். கொலை குறித்து போலீசார் விசாரணையில் 9 பேர் திட்டமிட்டு கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து இன்று ஏழு பேரை போலீசார் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த கொலைக்கு தொடர்புடைய தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளிகளான இருவரை தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..