நூதன முறையில் பணமோசடி..!! கட்சி உதவியாளராக பேசிய நபர்..!! போலிஸ் வலைவீச்சு..!!
குடியாத்தம் நகர மன்ற உறுப்பினர்களிடம் அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் உதவியாளர் பேசுகிறேன் என நூதன முறையில் பணமோசடி நகர மன்ற உறுப்பினர்கள் காவல் நிலையத்தில் புகார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் 36 வார்டுகளில் திமுக அதிமுக மதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளை சேர்ந்தவர்கள் நகர மன்ற உறுப்பினர்களாக உள்ளனர். திமுக கட்சியைச் சேர்ந்த நகர மன்ற உறுப்பினர்களிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உதவியாளர் பேசுகிறேன் எனவும்.
அதிமுக நகர மன்ற நகர மன்ற உறுப்பினர்களிடம் முன்னாள் அமைச்சர் வேலுமணி உதவியாளர் பேசுகிறேன் எனவும் மதிமுக நகர மன்ற உறுப்பினரிடம் துரைவைகோ உதவியாளர் பேசுகிறேன் எனவும் ஒரு கும்பல் அப்பகுதி மக்களிடையே பேசியுள்ளது..
நான் பயணித்த கார் குடியாத்தம் அருகே டயர் வெடித்து விட்டதாகவும் பணம் குறைவாக உள்ளதாகவும் கொஞ்சம் பண உதவி செய்யும்படி பேசி உள்ளனர். நகர மன்ற உறுப்பினர்கள் அமைச்சர் வேண்டுமென்றால் சொல்ல வைக்கட்டுமா என நூதனமாக பேசி நகர மன்ற உறுப்பினர்களிடம் ஜிபே மூலம் பல ஆயிரம் ரூபாய் பணம் வசூல் செய்து மோசடி செய்துள்ளனர்.
இதனால் குடியாத்தம் பகுதியில் உள்ள நகர மன்ற உறுப்பினர்கள் அதிர்ச்சி அடைந்து இன்று திமுக அதிமுக மதிமுக காங்கிரஸ் கட்சி சேர்ந்த நகர மன்ற உறுப்பினர்கள் குடியாத்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதில் சில நகர மன்ற உறுப்பினர்கள் புகார் கொடுப்பதற்கு அச்சப்பட்டு புகார் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே இது போன்ற நூதன முறையில் கட்சியின் அமைச்சர் பெயரை சொல்லி நகர மன்ற உறுப்பினர்களிடம் பணம் மோசடி செய்யும் நபர்களை கைது செய்ய வேண்டும் என குடியாத்தம் காவல்துறையினருக்கு கோரிக்கை வைத்துள்ளனர். நகர மன்ற உறுப்பினர்களுக்கு தொலைபேசி மூலம் நூதனமாக பேசி பணம் மோசடி செய்த சம்பவம் குடியாத்தம் பகுதியில் பெரும்பர பரப்பை ஏற்படுத்தி வருகிறது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..