மயிலாப்பூர் நிதி நிறுவனம் மோசடி..!! கிடைத்த முக்கிய ஆவணங்கள்..!! 4,100 புகார்கள்..!! முடக்கப்பட்ட சொத்துக்கள்..!!
சென்னை மயிலாப்பூர் தெற்கு மாடவீதியில் 150 ஆண்டுகள் பழமையான “தி மயிலாப்பூர் இந்து பெர்மனன்ட் ஃபண்ட் லிமிடெட்” என்ற பெயரில் நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அதில் முதலீடு செய்துள்ளதாக சொல்லபடுகிறது.., முதலீடு செய்யும் பணத்திற்கு அதிக வட்டி தருவதாக கூறி மக்களிடம் இருந்து பணத்தை பெற்றுள்ளனர் .
அதற்கிடையில் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களில் சுமார் 525 கோடியை திருப்பிக் கொடுக்க மறுப்பதாக பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் குற்றம்சாட்டினர். மேலும், 150-க்கும் மேற்பட்டோருக்கு வழங்கிய காசோலை பணம் இல்லாமல் திரும்பியதாக சம்பந்தப்பட்ட முதலீட்டாளர்களும் புகார் அளித்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மயிலாப்பூரில் உள்ள நிதி நிறுவன அலுவலகத்தில் அவ்வப்போது திரண்டு முறையிட்டு வந்தனர்.
அந்த புகாரின் பேரில் அந்நிறுவனத்தின் இயக்குனரும் பாஜக கூட்டணி கட்சி தலைவருமான தேவநாதன் யாதவ் உள்ளிட்ட 3 பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்து நிறுவனத்திற்கும் சீல் வைத்தனர்.. அத்தோடு தேவனாதனுக்கு சொந்தமான அனைத்து இடங்களிலும் சோதனை மேற்கொண்டு அவர்களது சொத்துகளை முடக்கியுள்ளனர்..
தற்போது தேவநாதனுக்கு உடந்தையாக செயல்பட்ட அவர்களது மோசடி கும்பலில் ஒருவரான இயக்குநர் சுதிர் சங்கர் (வயது 47) என்பவரை கடந்த 12ம் தேதி காவல்துறையினர் கைது செய்தனர். அதன் பின் கைது செய்யப்பட்ட சுதிர் சுங்கர் மற்றும் நிர்வாக இயக்குநர் தேவநாதன் உள்ளிட்ட 3 பேரை காவல்துறையினர் கடந்த 19ம் தேதி போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரணை செய்தனர்., இந்த விசாரணையானது கடந்த 2 நாட்களாக நடைபெற்றது..
கடந்த 2 நாட்களாக நடத்தப்பட்ட இந்த விசாரணையில் தேவநாதன் பினாமி பெயரில் சொத்துக்கள் வைத்திருப்பது தெரியவந்தது., அதனை தொடர்ந்து பினாமி பெயரில் இருந்த 1 கோடி ரூபாய் மதிப்பிலான நிலப்பத்திரம், 4 சொகுசு கார்களை பறிமுதல் செய்தனர். மற்றும் தேவநாதனுக்கு உடந்தையாக இருந்த சுதிர் சுங்கர் உட்பட 3 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அக்டோபர் 4ம் தேதி வரை சிறையில் அடைத்துள்ளனர்.
மயிலாப்பூர் நிதிநிறுவன மோசடியால் பாதிக்கப்பட்ட மக்கள் புகார் அளிப்பதற்காக மயிலாப்பூரில் சிறப்பு முகாம் ஒன்று கடந்த செப்டம்பர் 13ம் தேதி சிறப்பு ஏற்பாடு செய்யபட்டிந்தது., இந்த நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்ததற்கான உரிய ஆவணத்தோடு புகார் அளிக்க வேண்டும் என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது..
செப்டம்பர் 13ம் தேதி முதல் நேற்று வரை 4,100 பேர் தேவநாதன் மீது புகார் அளித்துள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சொல்லப்படும் தேவநாதன் மற்றும் அவருக்கு வலதுகரமாக செயல்பட்டு வரும் பினாமி சாலமன் மோகன்தாஸை காவலர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்..கடந்த 2 மாதங்களாக இவர்கள் தலைமறைவாக இருக்கும் நிலையில் தேடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளது, மேலும் அவர்களது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீட்டில் போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்…
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..