“ஒரே நாடு ஒரே தேர்தல்” அரசியல் சாசனத்திற்கு எதிரானது..!! எம்.பி துரைவைகோ கருத்து..!
ஒரே நாடு ஒரே தேர்தல் இந்திய அரசியல் சாசனத்திற்கும் ஜனநாயகத்திற்கும் எதிரானது என மதிமுக முதன்மை செயலாளரும் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தெரிவித்துள்ளார்…
எதிர் கட்சிகளின் வலுவான எதிர்ப்பு :
பிரதமர் மோடியின் 10 ஆண்டு ஆட்சி காலத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் நாடாளுமன்றத்தில் நீண்ட நாட்களாக விவாதிக்கப்பட்டு வருகிறது. அதற்கான பல முன்னெடுப்புகள் எடுக்கப்பட்ட போதிலும் எதிர்க்கட்சிகளின் வலுவான எதிர்ப்பால் அதனை நிறைவேற்றுவதில் அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவும் அதன் அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. முதற்கட்டமாக மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படும் என்றும் அதனை தொடர்ந்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல்களை நடத்தவும் கடந்த செப்டம்பர் 16ம் தேதி பரிந்துரை செய்தது..
இந்த “ஒரே நாடு ஒரே தேர்தல்” என்ற சட்டதை நடைமுறைக்கு கொண்டு வர இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் குறைந்தது ஐந்து பிரிவுகளின் திருத்தங்கள் செய்யப்பட்டிருக்க வேண்டும்.. அந்த பிரிவுகளாவது “பாராளுமன்றத்தில் அவைகளின் காலம் தொடர்பான பிரிவு 83, குடியரசுத் தலைவரால் மக்களவையை கலைப்பது தொடர்பான பிரிவு 85, மாநிலத்தின் பதவிக் காலம் தொடர்பான பிரிவு 172, சட்டமன்றங்கள் மாநில சட்டமன்றங்கள் கலைப்பது தொடர்பான சட்டப்பிரிவு 174 மற்றும் மாநிலங்களில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவது தொடர்பான பிரிவு 356 மேற்கண்ட பிரிவுகளில் மாற்றங்கள் செய்யபட வேண்டி இருக்கும்.. என்பது குறிப்பிடத்தக்கது
அதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்தனர்., இந்நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் இந்திய அரசியல் சாசனத்திற்கும் ஜனநாயகத்திற்கும் எதிரானது என மதிமுக முதன்மை செயலாளரும் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தெரிவித்துள்ளார்…
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் 81 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் இன்று பிறந்த ஐந்து குழந்தைகளுக்கு மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ அரை கிராம் மதிப்புள்ள தங்க மோதிரத்தை வழங்கினார்.. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ, மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் 81 வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று தமிழ்நாடு முழுவதும் தமிழர்களின் தலைநிமிர் நாளாக கொண்டாடப்படுவதாக தெரிவித்தார்
தொடர்ந்து பேசிய துரை வைகோ, ஒரே நாடு ஒரே தேர்தல் இந்திய அரசியல் சாசனத்திற்கும் ஜனநாயகத்திற்கும் எதிரானது எனவும் தொழில்நுட்ப ரீதியாகவும் சாத்தியப்படாது எனவும் தெரிவித்தார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..