35 Total Views , 1 Views Today
இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை..!!
லெபனானில் இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 500க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது…
கடந்த ஒரு வருடமாக இஸ்ரேல் ஹமாஸ் இடையே நடத்தப்பட்டு வரும் இந்த போரானது காசா பகுதியில் இருக்கும் ஹமாஸ் அமைப்பை முழுமையாக அழிக்கும் வரை போர் முடியாது என இஸ்ரேல் அறிவித்திருந்தது.
அதனை எதிர்த்து காசா மீது அடிக்கடி போர் தொடரும் இஸ்ரேலை எதிர்த்து லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலை கட்டுக்குள் கொண்டுவர போர் நடத்தப்படும் பகுதிகளில் இணையதள சேவைகள் முடக்கப்பட்டது..
அதுமட்டுமின்றி ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்திய ஆயிரக்கணக்கான பேஜர் கருவிகள் மற்றும் வாக்கி டாக்கிகள் ஒரே நேரத்தில் வெடித்து சிதறியது., அதில் 3 ஆயிரம் பேர் காயமடைந்த நிலையில் 37 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதனை தொடர்ந்து வடக்கு லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாவின் கோட்டையை குறிவைத்து இஸ்ரேல் ஏவுகணை தாக்குதலை நடத்தியது.
அதில் ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி உட்பட 44 பேர் பரிதாபமக உயிர் இழந்தனர். அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேலின் ஹைபா நகரில் தாக்குதல் நடத்தியது அதில் ஏவுகணைகளை வீசி தாக்குதல்களை நடத்தினர்.
அதன்பின் லெபனான் மீது நேற்று இஸ்ரேல் விமானங்கள் சரமாரியாக குண்டுமழை பொழிந்தது. லெபனான் மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தி உள்ள நிலையில், நேற்று ஒரே நாளில் மட்டும் 300 இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது இந்த ஏவுகணை தாக்குதில் 500க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிர் இழந்து இருப்பதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது..
இந்த தாக்குதலில் 35 குழந்தைகள், 58 பெண்கள் உட்பட 492 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 1,645 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக தான் இஸ்ரேலின் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் 200-க்கும் மேற்பட்டோர் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்..
இஸ்ரேலின் மீது இராணுவ படை, விமானப்படை தளங்களை குறிவைத்து இந்த ராக்கெட்டுகளை ஏவியதாக ஹிஸ்புல்லா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹிஸ்புல்லா மீது இஸ்ரேல் தீவிர தாக்குதல் நடத்த ஆரம்பித்துள்ளது மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பல ஆண்டுகளுக்கு பின் லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய மிக பெரிய தாக்குதல் இதுவாகும்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..