119 Total Views , 1 Views Today
ஆங்கில புத்தாண்டு அன்று தேமுதிக தலைவர் விஜயகாந்த தொண்டர்களை சந்திக்கவுள்ளதாக அந்த கட்சி தலைமை அறிவித்துள்ளது.
ஒவ்வொரு புத்தாண்டு அன்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது தொண்டர்களை சந்தித்து வருவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் காலை 11 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை தொண்டர்களை சந்திக்கவுள்ளதாகவும் தொண்டர்கள் விஜயகாந்தை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கலாம் தேமுதிக தலைமை கழகம் அறிவித்துள்ளது.