சுவையான மசாலா ஊத்தப்பம்..!
தேவையான பொருட்கள்:
2 கப் கோதுமை மாவு
1/2 கப் சின்ன வெங்காயம்
4 பச்சை மிளகாய்
1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
கறிவேப்பிலை, கொத்தமல்லி சிறிதளவு
உப்பு தேவையான அளவு
1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
1/2 கப் அளவு தேங்காய் துருவல்
எண்ணெய் தேவையான அளவு
செய்முறை:
கோதுமை மாவினை முதலில் நன்றாக சலித்து எடுத்துக் கொள்ளவும்.
கோதுமை மாவில் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்துக் கொள்ள வேண்டும்.
ஒரு மிக்ஸியில் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
அரைத்தவற்றை கோதுமை மாவில் கலந்துக் கொள்ள வேண்டும்.
மேலும் அதில் தேங்காய் துருவல் மற்றும் கொஞ்சமாக தண்ணீர் விட்டு கலந்து கட்டிகள் இல்லாதவாறு தோசை மாவு பதத்திற்கு கலந்துக் கொள்ள வேண்டும்.
இந்த மாவினை மூடி மூன்று மணி நேரத்திற்கு புளிக்க வைக்க வேண்டும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் ஒரு கரண்டி மாவினை எடுத்து ஊற்றி இருபுறமும் எண்ணெய் ஊற்றி வேகவைத்து எடுக்க வேண்டும்.
அவ்வளவுதான் டேஸ்டியான மசாலா ஊத்தப்பம் தயார்.