சுவையாக இருக்கும் சிவப்பு கீரை பொரியல்..!
சிவப்பு கீரையில் இரும்புச்சத்து, புரதச்சத்து ஆகியவற்றை கொண்டுள்ளது. இதனை சாப்பிடுவதினால் பெண்களின் உடம்பில் இரத்த ஓட்டமானது சீராக செயல்பட உள்ளது.
கீரைகளில் இருக்கும் சத்துக்கள் முழுமையாக கிடைக்க அதனை மிக குறைவாக சமைத்து சாப்பிடுவது தான் நல்லது.
தேவையான பொருட்கள்:
- 2-கப் பொடியாக நறுக்கின சிவப்பு கீரை
- 1/4 கப் தேங்காய் துருவல்
- 3 மிளகாய் வற்றல்
- 1/2 டீஸ்பூன் சீரகம்
- 1 டீஸ்பூன் கடுகு
- 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
- 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய்
- உப்பு தேவைக்கு
செய்முறை:
முதலில் கீரைகளை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலை அடுப்பில் வைத்து சூடானதும் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து பொரிக்கவும்.
பிறகு நறுக்கி வைத்திருக்கும் கீரைகளை சேர்த்து வதக்கவும்.
அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விட்டு வதக்கவும்.
தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்து கீரையை வேகவைக்கவும்.
ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல், மிளகாய், சீரகம் ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் விடாமல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
கீரை நன்றாக வெந்து வந்ததும் அதில் அரைத்த கலவையை சேர்த்து கிளறி விடவும்.
அனைத்தும் நன்றாக கலந்து வந்ததும் உப்பு சரிபார்த்து தேவைப்பட்டால் உப்பு சேர்த்துக் கொள்ளலாம்.
அவ்வளவுதான் அருமையான சிவப்பு கீரை பொரியல் தயார்.
இதனை அப்படியேவும் சாப்பிடலாம் அல்லது சூடான சாதம் வடித்து அதில் போட்டு பிசைந்தும் சாப்பிடலாம் அருமையாக இருக்கும்.