ராகுல் காந்தி தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளிக்கையில் தனது வருங்கால மனைவி குறித்தும் தனது திருமணம் குறித்தும் சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துள்ளர்.
காங்கிரஸ் கட்சியின் முன்னால் தலைவரான ராகுல் காந்தி தற்போது இந்திய ஒற்றுமை யாத்திரை பயணத்தை மேற்கொண்டு வருகிறார். 100 நாட்களை கடந்து மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வரும் இந்த நடை பயண யாத்திரைக்கு விழாக்காலம் என்பதால் 9 நாட்கள் விடுப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ராகுல் காந்தி தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளிக்கையில் அவரது வருங்கால மனைவி பற்றி கேள்வி கேட்கப்பட்டது .
அதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, என்னுடைய பாடி இந்திரா காந்தி என்னுடைய இரண்டாம் தாய் என்றும் நான் திருமணம் செய்ய விரும்பும் பெண்ணின் குணநலன்கள் பற்றியெல்லாம் கவலைப்பட மாட்டேன் மேலும், என்னுடைய அம்மா மற்றும் என்னுடைய பாட்டியின் குணங்களை போன்று இருந்தால் நன்றாக இருக்கும் என்று கூறினார். இது குறித்தான காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு
வைரலாகி வருகிறது.