பீகார் மீது தனி கவனம் செலுத்தும் பிரதமர் மோடி..!! ஜித்தன் ராம் மாஞ்சி குற்றச்சாட்டு..!!
பிரதமர் மோடி பீகார் மீது தனி கவனம் செலுத்தி வருவதாக மத்திய அமைச்சர் ஜித்தன் ராம் மாஞ்சி தெரிவித்துள்ளார்..
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் இந்தியா முழுவதும் பாஜக 242 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் பாஜக கூட்டணி மூலம் மீண்டும் ஆட்சி அமைத்தது..
பாஜக கூட்டணி கட்சிகளில் ஒன்றான “தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள முக்கிய கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதீஷ் குமார், பீகாருக்கு தனி அந்தஸ்து வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
அதற்கு, கடந்த ஜூலை 22ம் தேதி மத்திய நிதித்துறையின் இணை அமைச்சராக இருக்கும் பங்கஜ் செளத்ரி பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க முடியாது என நிதிஷ் குமாருக்கு பதில் அளித்துள்ளார்..
அந்த சூழலில், மத்திய அமைச்சர் ஜித்தன் ராம் மாஞ்சி பீகார் மாநிலம் பாட்னாவில் நேற்று 80வது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்.. அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் “சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்புவது பெரிய விஷயம் அல்ல. ஆனால், கடைசி நிதிநிலை அறிக்கையில் மாநிலத்துக்கு எவ்வளவு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன என்பதை பார்க்க வேண்டும். ரூ.300 கோடிக்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பீகார் மீது பிரதமர் மோடி சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார். எந்த மாநிலத்துக்கும் சிறப்பு அந்தஸ்து வழங்க மாட்டோம் என்று நிதி ஆயோக் ஏற்கெனவே முடிவெடுத்துள்ளது. பீகாரின் வளர்ச்சி எந்த சூழலிலும் நின்றுவிடப் போவதில்லை.” என மத்திய அமைச்சர் ஜித்தன் ராம் மாஞ்சி இவ்வாறே செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..