இந்தியாவை பொருத்த வரை அடுத்த 40 நாட்கள் மிக முக்கியமானது என்றும் அந்த காலகட்டத்திற்கு பிறகு இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கலாம் என்றும் ஒன்றிய சுகாதார துறை எச்சரித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் தீவிரம் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் உலக நாடுகள் பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. சீனா, அமெரிக்கா மற்றும்ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் பரவி வருவதால் இந்தியாவில் அதனை தடுக்கும் விதமாக பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் இந்தியாவில் கொரோனா பாதிப்பு கணிசமாக உயருகிறதாக தெரிவிக்கப்படுகிறது
இந்நிலையில், இந்திய ஒன்றிய சுகாதார துறை அறிவிப்பில் அடுத்த 40 நாட்கள் மிகவும் முக்கிமானதாக இருக்க கூடும் என்றும் கடந்த முறை கொரோனா தோற்று ஆசிய கிழக்கு நாடுகளுக்கு பரவிய 36 நாட்கள் கழித்தே இந்தியாவில் அதிகமாக பரவ தொடங்கியது இதனால் இந்த முறையும் 40 நாட்கள் கழித்து கொரோன தோற்று இந்தியாவில் தீவிரம் பெற வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது மேலும், இந்த வகை வைரஸ் ஒருவருக்கு பரவினால் சுற்றி இருப்போர் 16 பேருக்கு ஆபத்தாகக்கூடும் என்றும் எச்சரித்துள்ளனர்.