காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாகாந்தியை சந்தித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்..!!
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இரண்டு நாட்கள் அரசு பயணமாக நேற்று டெல்லி வந்தடைந்தார்., அப்போது அவரை டெல்லியில் உள்ள திமுக எம்பிக்கள், மற்றும் கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர்.
அதன்பின்னர் இன்று காலை தமிழ்நாடு இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்து தமிழகத்தில் ஒதுக்கபட வேண்டிய நிதி குறித்தும்., சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான 2ம் கட்ட நிதி, பள்ளிக்கல்வி சமக்ர சிக்சா திட்டத்துக்கு நிதி உள்ளிட்டவற்றை மத்திய அரசு உடனடியாக ஒத்துக்க வேண்டும் என வலியுறுத்தி பிரதமரிடம் மூன்று முக்கிய அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றி தருமாறு மனுவை அளித்தார்..
அதனைத் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சந்தித்து பேசினார்., இந்த சந்திப்பில் முதலமைச்சர் ஸ்டாலினுடன்., திமுக பொருளாளரும், மக்களவைக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டிற்காக மத்திய அரசு ஒதுக்கப்பட வேண்டிய நிதியை விரைவில் ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி பிரதமரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம்.., அதன் பின்னர் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியுடனான சந்திப்பு நிமித்தமானது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..