ஷாருக்கான் நடித்துள்ள பதான் படத்தை பார்த்த சென்சார் போர்ட் அந்த படத்தில் இருக்கும் சர்ச்சைக்குரிய பாடல் காட்சியை மாற்றியமைக்க வலியுறுத்தியுள்ளது. இந்த தகவல் தற்போது பெரும் வைராலகி வருகிறது.
இந்திய சினிமா என்றாலே பாலிவுட் சினிமா தான் என்ற நிலை மாறி இந்த ஆண்டில் இந்தியாவிலேயே மிக தோல்விகளை கொடுத்த இண்டஸ்ட்ரியாக பாலிவுட் இண்டஸ்ட்ரி மாறியுள்ளது இந்த நிலையில்,ஷாருக்கான் நடித்து விரைவில் திரைக்கு வெளியாகவுள்ளது அதனால், அப்படத்தின் ஒரு பாடல் காட்சி வெளியாகி பெரும் சர்ச்சைக்குள்ளானது. தீபிகா படுகோன் மற்றும் ஷாருக்கான் இடம்பெற்றிருந்த அந்த பாடலில் தீபிகா படுகோனிற்கு காவி உடை அணிந்து நடனம் ஆடியது பாஜகவினரிடம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி நாடு முழுவதும் பேசு பொருளானது அதற்க்கு நடிகர் ஷாருக்கானும் சினிமாவை குறுகிய பார்வைக்குள் பார்க்க கூடாது என்று மறைமுகமாக பதிலளித்திருந்தார்.
பாஜகவினர் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் பதான் திரைப்படத்தை அந்த படக்குழு சென்சார் போடிற்கு அனுப்பி வைத்தது, அந்த படத்தை பார்த்த சென்சார் போர்ட் அதிகாரிகள் பதான் பட குழுவிற்கு அந்த பாடலில் சிறிய மாற்றங்களை ஏற்படுத்த வலியுறுத்தியுள்ளது. இதனால் பதான் படம் அந்த காட்சியை மற்றும் சூழல் ஏற்பட்டுள்ளது. பதான் படத்தின் மாற்றங்களுக்கு பிறகு மீண்டும் சென்சாருக்கு அனுப்படும் என்று எதிர்பார்க்கபடுகிறது.