ருசியான பால் பணியாரம் ரெசிபி..!
தேவையான பொருள்கள்:
பச்சரிசி -1கப்
உளுந்து-1 கப்
தேங்காய்ப்பால் -3 கப்
சர்க்கரை -1 கப்
ஏலக்காய் தூள் -1/2 டேபிள் ஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை நன்றாக நீரில் கழுவி பின் ஊறவைக்க வேண்டும்.
பின் அதனை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு தேங்காயம் உடைத்து அதில் இருந்த தேங்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
ஒரு மிக்ஸி ஜாரில் அந்த தேங்காய் துண்டுகளை சேர்த்து அரைத்து அதனை வடிகட்டி பாலை எடுத்துக் கொள்ள வேண்டும்.
அரைத்த தேங்காய் பாலில் சர்க்கரை மற்றும் ஏலக்காய்த்தூளை கலந்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் அரைத்த மாவில் சிறு சிறு உருண்டைகளாக சேர்த்து பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பொரித்த உருண்டைகளை லேசாக ஆறவைத்து அரைத்த தேங்காய் பாலில் போட வேண்டும்.
10 நிமிடம் ஊறியதும் சாப்பிட பரிமாறலாம்.
அவ்வளவுதான் டேஸ்டியான பால் பணியாரம் தயார்.
இதனை குழந்தைகளுக்கு மாலையில் செய்து கொடுக்கலாம். உடலுக்கு சத்தான ஒரு ஸ்நாக்ஸ் ஆகும்.