புரட்டாசி 2வது சனி விரதம்..!! இந்த நேரத்தில் தாளிகை இட மறக்காதிங்க..!! பெருமாள் முழு அருள் கிடைக்க..!!
புரட்டாசி மாதம் என்பது பெருமாளுக்கு மிகவும் உகுந்த மாதமாக சொல்லபடுகிறது. அதுவும் புரட்டாசி சனிக்கிழமை அன்று பெருமாளை வணங்கினால், சிறந்த பலன் கிடைக்கும். இந்த மாதத்தில் அசைவ உணவுகளை தவிர்த்து சைவ உணவுகளை கடைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை ஏராளம்.
புரட்டாசி மாதம் சனிக்கிழமைக்கென மேலும் ஒரு விசேஷம் உள்ளது. புரட்டாசி சனிக்கிழமை நாட்களில் சனி பகவான் அவதரித்தார். அதனால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய, நம்மை காக்கும் கடவுளான “திருமாலை” வணங்குவது வழக்கத்திற்கு கொண்டுவரப்பட்டது என ஆன்மீக ஐதீக வரலாற்றில் சொல்லியுள்ளனர்..
புரட்டாசி மாதம் பெருமாளுக்கு சிறந்த மாதம். இந்த மாதம் முழுவதும் சனிக்கிழமை மட்டுமின்றி திங்கள், புதன்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் புண்ணியம் கிடைக்கும்.. இந்த விரத வழிபாடுகள் மகாலட்சுமியை மகிழ்ச்சி அடையச் செய்யும். அன்னை மகாலட்சுமியின் அருளால் நம் வீட்டில் செல்வ வளம் பெருகும்..
சனியால் ஏற்படும் சங்கடங்கள் நீங்கும்.. ஏழுமலையானை கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக விளங்கும் ஏழுமலையானை புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதமிருந்து வழிப்பட்டால்
சனிபகாவனின் பிடியில் இருந்து விலக முடியும்.., மேலும் சனிக்கிழமை அன்று பெருமாளுக்கு படையலிட்டு தீப ஆராதனை செய்து வழிபாடு செய்தால் சிறந்த பலன்கள் கிடைக்கும்
புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையில் பலரும் தாளிகை இடக்கூடாது என நினைத்துக்கொண்டு இருப்பார்கள் அதற்கு காரணம் தெய்வத்தின் வழிபாட்டை பொருத்த வரையில் ஒற்றை படை எண்ணை விட இரட்டை படை எண்ணை வைத்து தான் வழிபாடு செய்வது சிறந்தது என சொல்லுவார்கள்..
அப்படியாக புரட்டாசியில் வரும் இரண்டாவது சனியில் வீட்டில் தாளிகை (படையல் ) வைத்து தீப ஆராதனை செய்து வழிபாடு செய்யலால்.. ஆனால் இந்த விரதத்தை குறிப்பிட்ட நேரத்திற்குள் செய்து முடிக்க வேண்டும்..
தாளிகையிடுவதால் கிடைக்கும் பலன் :
அதாவது இன்று காலை 10.30 முதல் 11 மணிக்குள் அல்லது பகல் 12 முதல் 1 மணிக்குள் தாளிகையிட்டு தீப ஆராதனை செய்ய வேண்டும்..,
அதற்கு காரணம் இன்று காலை 10.30 முதல் 11 வரை சுக்கிர ஓரையாகும். இந்த நேரத்தில் தளிகை இட்டால் சுக்கிரனின் அருள் கிடைக்கும். செல்வம் சேர்ந்து கொண்டே இருக்கும்.
அதே போல் பகல் 12 முதல் 1 வரையிலான நேரம் சந்திர ஓரை நேரமாகும். சந்திரனுக்குரிய அதிதேவதை தெய்வம் திருப்பதி ஏழுமலையான். அதனால் சந்திர ஓரையில் தளிகை இட்டால் திருப்பதி ஏழுமலையான் அருளால் நம்முடைய வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறி நம்முடைய கஷ்டங்கள் அனைத்தும் தீரும் என்பது ஐதீக உண்மை..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..