சுவையான புடலங்காய் கூட்டு ரெசிபி..!
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
தேவையான பொருட்கள்:
- புடலங்காய் 1
- பாசிப்பருப்பு 75 கிராம்
- மஞ்சள்தூள் 1/2 ஸ்பூன்
- பச்சை மிளகாய் 2
- துருவிய தேங்காய் 1 ஸ்பூன்
- சோம்பு 1 ஸ்பூன்
- கறிவேப்பிலை சிறிது
- எண்ணெய் 2 ஸ்பூன்
- கடுகு 1/2 ஸ்பூன்
- உப்பு தேவையானது
- தண்ணீர் தேவையானது
செய்முறை:
- புடலங்காயை நறுக்கி அதில் இருக்கும் விதைகளை நீக்கிவிட்டு பின் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
- பாசிப்பருப்பை நீரில் அலசி எடுத்துக் கொள்ள வேண்டும்.
- ஒரு குக்கரில் பாசிப்பருப்பை சேர்த்து அதில் அரை கப் தண்ணீர் ஊற்றி மஞ்சள்தூள் சேர்க்கவும்.
- அதில் நறுக்கிய புடலங்காயையும் சேர்த்து ஒரு விசில் வரும் வரை வேகவைத்து இறக்கவும்.
- ஒரு மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய், சோம்பு, மிளகாய் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
- அடுப்பில் வேகவைத்த பருப்பு குக்கரை வைத்து அதில் அரைத்த கலவையை சேர்த்து உப்பு போட்டு கலந்து விட்டு வேகவைக்கவும்.
- ஒரு வாணலில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து பின் குக்கரில் ஊற்றி கலந்து விட வேண்டும்.
- அவ்வளவுதான் புடலங்காய் கூட்டு சுவையாக தயாராகிவிட்டது.
- குழந்தைகளுக்கு காரம் அதிகமாக சேர்க்காமல் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.