டாடா நிறுவன உற்பத்தி ஆலை.. முதலமைச்சர் ஸ்டாலின் துவக்கம்…!!
ராணிபேட்டை மாவட்டத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சார்பில் 9,000 கோடி ரூபாய் முதலீட்டில் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்களை உற்பத்தி செய்வதற்கான ஆலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்..
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி தமிழ்நாட்டில் முதலீட்டாளர்களை ஈற்பதற்காக அமெரிக்க அரசு முறை பயணம் சென்றுள்ளார்.. அமெரிக்க சென்ற நாளில் இருந்து ஒவ்வொரு தொழில் நிறுவனங்களுடனான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டது..
இந்த 17 நாட்கள் சுற்றுப்பயணத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் தமிழக அரசு மொத்தம் 18 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டது.. இதுவரையில் மொத்தம் 7,616 கோடி வரையில் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடப்பட்டுள்ளது..
சென்னை மறைமலைநகரில் கார் உற்பத்தியில் சிறந்து விளங்கும் போர்டு நிறுவனம், முதலமைச்சரின் வேண்டுகோளை ஏற்று புதிய கார் உற்பத்தி ஆலையை தொடங்க திட்டமிட்டது. தமிழ்நாட்டில் மற்றொரு கார் உற்பத்தி ஆலையை தொடங்குவதற்காக 9,000 கோடி ரூபாய் முதலீட்டில் கடந்த மார்ச் மாதம் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துடன் முதலமைச்சர் ஸ்டாலின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இந்த திட்டத்தின் மூலம் 5000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்..
இப்படி இருக்கையில் ஜாகுவார் லேண்ட் ரோவர் எலெக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்யா டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் ஆண்டுக்கு 2 லட்சம் கார்கள் உற்பத்தி செய்யப்படவுள்ளது.. அதில் 25% ஜாகுவார் லேண்ட் ரோவர் எலெக்ட்ரிக் கார்கள் உற்பத்தி செய்யப்படும் எனவும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.. எலெக்ட்ரிக் கார்கள் உட்பட மற்ற கார்களும் உற்பத்தி செய்ய போவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. வருகின்ற 2026ம் ஆண்டுக்குள் 75% கார்களை எலெக்ட்ரிக் கார்களாக மாற்றப்படும் என ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்த நிறுவனமானது சென்னைையை அடுத்த ராணிப்பேட்டையில் பனப்பாக்கத்தில் ரூ.9000 கோடியில் 400 ஏக்கரில் அமையவுள்ளது., அதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்.. இந்த புதிய ஆலை மூலம் 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். என தமிழக அரசு தெரிவித்துள்ளது.. தமிழ்நாட்டில் புதிய தொழில்களை தொடங்குவதற்காகவும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கத்துடன், பல்வேறு முன்னெடுப்புகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு செய்து வருகிறது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..