மக்களின் மனம் கவர்ந்த கிராமத்து நாயகன்..!! சசிகுமார் 50..!!
ஒரு சில நடிகருக்கு தான் கிராமத்து கதாபாத்திரம் பொருந்தும். அந்த வகையில் இந்த நடிகரை கிராமத்து நாயகன் என சொல்லலாம். தன்னுடய சினிமா வாழ்வில் படிப்படியாக உயர்ந்தவர். தமிழ் சினிமாவில் பல்வேறு இயக்குனருடன் உதவி இயக்குனராக தன்னுடைய திரை பயணத்தை தொடங்கினார், “சுப்புரமணியபுரம்” என்ற திரைப்படத்தின் முலம் அறிமுகம் ஆனவர் தான் நம் சசிக்குமார்..
இந்த திரைப்படம் நல்ல ஒரு வரவேற்பை பெற்றது. பலவிதமான விருதுகளையும் அள்ளிச்சென்றது, இன்றுவரை பலரும் ரசித்து கொண்டாடி கொண்டுதான் இருகிறார்கள். இந்த திரைப்படத்தை பார்த்து அதனை தொடர்ந்து மற்றொரு வெற்றி படம் என்றால் “நாடோடிகள்” இந்த படத்தில் வரும் பாடல்கள் என அனைத்தும் ரசிக்கும் படியாக இருக்கும். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம், சுந்தரபாண்டியன், கொடிவீரன், வெற்றிவேல், உடன்பிறப்பே, அயோத்தி, கருடன் போன்ற படங்களும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என சொல்லலாம்..
இந்த படத்தில் நடித்த அத்தனை கதாபாத்திரங்களும் மிக அருமையாக இருக்கும், காமெடிக்கு பஞ்சமே இருக்காது, காதல் வந்தால் எப்படி மாறுவார்கள் என்று நான் சொல்லவே தேவை இல்லை, அதேமாதிரி இந்த ஹீரோவும், தன்னுடைய உடை பாவனை எல்லாம் மாற்றி கொள்கிறான், இந்த பாடலுக்கு இசையமைத்தவர் என்.ஆா்.ரகுநந்தன் பாடலை பாடியவர்கள் ஜி.வி. பிரகாஷ் குமாா், ஸ்ரேயா கோஷல் இணைந்து பாடிய பாடல் இது.
கட்டம் போட்ட
ஒன்றா இல்லை கோடு
போட்ட ஒன்றா எந்தச்
சட்டைப் போட என
முட்டிக்கொண்டேன் உன்னாலே…….
இன்றைக்கும் சில கிராமத்து திருவிழாக்களில் ஒளித்து கொண்டுதான் இருக்கிறது. இந்த பாடல், பொண்ணுங்களை எப்படி எல்லாம் பாடல் படலாமா என்று வியக்கும் அளவிற்கு இருக்கும் இந்த பாடல் இறங்கி குத்தாட்டம் போடா வைக்கும்படியாக இருக்கும், ஒரு பாம்பினை பிடிப்பதற்கு எப்படி மகுடி வாசிக்கிறார்களோ அதுமாதிரி ஒரு பொண்ணை பிடிப்பதற்கு கபடி ஆடவேண்டும் என்று கேலியாக பாடுகின்றனர் .இசையமைப்பாளர் சுந்தர் சி பாபு இசையில் பாடகர் வேல்முருகன் பாடிய பாடல் இது.
ஆடுங்கடா மச்சான் ஆடுங்கடா
அழகான பொண்ணப் பாத்து தேடுங்கடா
பாடுங்கடா மச்சான் பாடுங்கடா
பாவாடைப் பின்னாலதான் ஓடுங்கடா…..
இவரு நடிக்கிற படங்களில் ஒரு ஒற்றுமை உண்டு அது என்னவென்றால் மத்தவங்களுக்கு உதவி பண்ண போய் இவரு மாட்டிப்பாரு, அதே மாதிரி இந்த படத்தில் தன்னுடைய தம்பிக்கு உதவி பண்ண சென்ற இவர் மாட்டிக்கொள்ளுவார். அந்த பெண்ணை திருமணம் செய்து வாழ்கை கொடுத்திருப்பார். சாமி போல் என் வாழ்க்கையில் வந்து நான் கேட்கும் முன்னே வரம் தந்தவரே என்ன ஒரு அருமையான வரிகள் பாருங்க.இந்த பாடலை இசையமைப்பாளர்
சாமி போல வந்தவனே
கேட்கும்முன்னே தந்தவனே
நான் வணங்கும் நல்லவனே
நல்ல உள்ளம் கொண்டவனே…….
இந்த வரிகளை கேட்கும்பொழுது தன்னை அறியாமல் கண்டிப்பாக கண்களில் கண்ணீர் வரும், அந்த காலகட்டத்தில் கணவன் மனைவி என்பது நம் அனைவரும் அறிந்த ஒன்றே ஒரு சுதந்திரம் இல்லாமல் மனைவி இருப்பார்கள். அந்த காலகட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட பட ஒரு படமாக இருக்கும்.
எப்பொழுதுமே ஒருவர் நமக்கு பாசம் காட்டினாலும் சரி வெறுப்பு காட்டினாலும் சரி அவங்க இல்லாமல் போகும் போது அந்த வலி இங்கு பலரும் உணர்ந்து கொண்டுதான் இருக்கிறாள். இந்த பாடலை இசையமைப்பாளர் என் .ஆர். ரகுநந்தன் இசையில், பாடகர் பிரதீப் குமார் பாடிய பாடல் இது.
பக்கத்துல வாழும்போது
உன்னருமை தெரியல
உன்னருமை தெரியும்போது
பக்கம் நீ இல்ல……….
பாசம், கோவம், ஏமாற்றம் என எல்லாம் கலந்ததுதான் வாழ்கை. அதை நாம் எப்படி கடந்து வாழ்கிறோம் என்பதில் தான் இங்கு பலருக்கும் போர்க்களமாக மாறிவிடுகிறது. மக்களின் மனம் கவர்ந்த கிராமத்து நாயகன் சசிகுமார் நேற்று தன்னுடைய 50வது பிறந்தநாளை கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது..
– சரஸ்வதி
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..