பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை…!! முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட உத்தரவு..!!
முன்னெச்சரிக்கை என்பது இருந்தால் எந்த பாதிப்பையும் தடுத்துவிடலாம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபற்றது. இதில் துணை முதலமைச்சர் உதயநிதி, அமைச்சர்கள் துரைமுருகன், கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், எ.வ.வேலு, சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளும் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்,கடந்த காலங்களில் சென்னை, நெல்லை, தூத்துக்குடியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாகவும் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் சென்னை, நெல்லை, தூத்துக்குடியில் வரலாறு காணாத மழை பெய்தது.. சில முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தும் கூட ஒரு சில பகுதிகளில் தண்ணீர் தேங்கியது., இதனால் மக்களின் இயல்பு வாழ்கையும் பாதிக்கப்பட்டது..
கடந்த 3 ஆண்டுகளாக பருவமழை முன்னெச்சரிக்கை கூட்டம் நடைபெற்று வருகிறது தமிழ்நாடு அரசின் துரித நடவடிக்கையால் 3 மாவட்டங்களில் விரைவாக இயல்புநிலை திரும்பியது. அதேபோல் இந்த ஆண்டும் பருவ மழையால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது..
மின் இணைப்புகளை கண்காணிப்பது, வடிகால்களை சுத்தம் செய்வது, திறந்தவெளி கால்வாய்களை தூர்வாரி மூடுதல், குழிகளை நிரப்புதல் மற்றும் மாணவர்களின் பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படுத்தும் மரங்கள் மரக்கிளைகளை வெட்டி அகற்றுதல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும். அபாயமுள்ள நீர்நிலைகளுக்கு அருகே வேடிக்கை பார்க்க அனுமதிக்கக் கூடாது.. மின்சார கம்பிகள் அறுந்து விழுந்துள்ளது என்ற புகார்கள் எழுந்தால் உடனடியாக அந்த பகுதியில் மின்சாரம் சேவை நிறுத்தப்பட்டு., அந்த கம்பிகளை அகற்ற வேண்டும்.., என முதலமைச்சர் ஸ்டாலின் இவ்வாறே துறை சார்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்..
மேலும் வானிலை முன்னெச்சரிக்கை, மழையின் அளவு, ஏரிகளில் நீர் இருப்பு நிலவரம் உள்ளிட்டவை குறித்து அறிய TN Alert என்ற செயலி தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..