வேப்பமரத்தில் பால் வடிந்த அதிசயம்..!! மெய் சிலிர்த்த மக்கள்…!!
நெமிலி அருகே வேப்பமரத்தில் பால் போல் வடிந்த அதிசயம் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வழிபாடு
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த சயனபுரம் பகுதியில் ஒரு வேப்ப மரத்தில் பால் வடிவதாக பொதுமக்களுக்கு தகவல் பரவி உள்ளது. இதனையடுத்து பொதுமக்கள் அனைவரும் அங்கு சென்று பார்த்தபோது வேப்பமரத்தில் இருந்து பால் ஊற்றுப் போல வடிந்துள்ளது.
இதனை கண்ட அப்பகுதி மக்கள் மரத்திற்கு பூ மாலை அணிவித்து., மஞ்சள் வைத்து குங்குமம் இட்டு தீபமேற்றி வழிபட்டு சென்றனர் அது மட்டுமில்லாமல் மரத்தில் திடீரென பால் வந்ததை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்..
மேலும், வேப்ப மரத்தில் பால் வடிந்ததைத் தொடர்ந்து அங்குள்ள சில பெண்கள் மீது சாமி அருள் வந்து ஆடினார் அப்போது இந்த இடத்தில ஓம் சக்தி அம்மன் குடிபெயர்ந்து இருப்பதால் மரத்தில் இருந்து பால வடிந்துள்ளதாக அந்த பெண்கள் தெரிவித்தனர்..
இது செய்தி பரவ தொடங்கியதை தொடர்ந்து கிராமம் முழுவதும் உள்ள மக்கள் மட்டுமின்றி வெளிமாவட்டத்தில் உள்ள பொதுமக்களும், இதனைப் பார்க்க, அப்பகுதியில் திரண்டனர். இதனால், அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. இந்த செய்தி அந்த கிராமத்தில் மட்டுமின்றி இணையத்திலும் வேகமாக பரவி வருகிறது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..