69 Total Views , 1 Views Today
சீஸி முட்டை பிரட் ரெசிபி..!
தேவையான பொருட்கள்:
முட்டை 2
பிரட் துண்டுகள் 4
சீஸ் ஸ்லைஸ் 2
மிளகுத்தூள் 1/2 ஸ்பூன்
உப்பு தேவையானது
கொத்தமல்லி இலை சிறிது
வெண்ணெய்
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் மிளகுத்தூள், உப்பு, கொத்தமல்லி இலை ஆகியவற்றை நன்றாக கலந்துக் கொள்ள வேண்டும்.
இரண்டு பிரட் துண்டுகளை எடுத்து அதனை நான்கு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
பின் ஒரு சீஸ் ஸ்லைஸை நான்கு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
இரண்டு பிரட் துண்டுகளுக்கு இடையே ஒரு சீஸ் துண்டு வைத்து மூடி வைக்க வேண்டும்.
ஒரு ஃபேனை அடுப்பில் வைத்து வெண்ணெய் சேர்த்து கொள்ள வேண்டும்.
தயாரித்த பிரட் துண்டுகளை முட்டை கலவையில் முக்கி எடுத்து ஃபேனில் போட்டு வேகவைக்கவும்.
ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பிப்போட்டு பொன்னிறமாக வேக வைத்து எடுக்க வேண்டும்.
இந்த முறையை திரும்ப செய்து அனைத்து பிரட் துண்டுகளையும் வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
அவ்வளவுதான் சுவையான சீஸி முட்டை பிரட் தயார்.