சென்னை உயர் நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தின் புதிய தலைவர் தேர்வு..!!
சென்னை உயர் நீதிமன்றத்தின் பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தின் நிர்வாகிகளாக புதிய வழகறிஞர்கள் இன்று பொறுப்பேற்றனர்.
கடந்த 2019ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தின் பெண் வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது வெற்றி பெற்ற பெண் வழக்கறிஞர்கள் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் பதவி வகித்துவந்த நிலையில் பதவிக்காலம் முடிவடைந்தும் கூட தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது.
கடந்த நான்கு ஆண்டில் தேர்தல் நடத்தாமல் அதே நிர்வாகிகள் விதிகளுக்கு முரணாக செயல்ப்பட்டு வந்ததால் சென்னை உயர்நீதிமன்றம் தேர்தல் நடத்தக்கூடாது என உத்தரவிட்டிருந்தது.. அதன் பின்னர்
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் படி, சென்னை உயர் நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தேர்தல் கடந்த செப்டம்பர் 27ம் தேதி நடைப்பெற்றது.
இந்த தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது அதில், சென்னை உயர் நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவராக என்.எஸ்.ரேவதி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
துணை தலைவராக ராஜலட்சுமியும், செயலாளராக பர்வீன், நூலகராக மார்க்கெரெட் லாரன்ஸ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டனர். சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீராம் சான்றிதழ்களை வழங்கினார். புதிய நிர்வாகிகள் இன்று பொறுப்பேற்று கொண்டனர்.
இன்று புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட உயர்நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் அடுத்த 2 ஆண்டுகள் பதவியில் நீடிக்க உள்ளனர். என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..