பீட்ரூட் இட்லி ரெசிபி..!
தேவையான பொருட்கள்:
ரவை 1 கப் வறுத்தது
தயிர் 1 கப்
உப்பு தேவையானது
பீட்ரூட் சாறு 1/2 கப்
இஞ்சி 1 துண்டு
பச்சை மிளகாய் 3
முந்திரி 1 ஸ்பூன்
கடுகு 1/2 ஸ்பூன்
உளுந்து பருப்பு 1 ஸ்பூன்
வெங்காயம் 1 நறுக்கியது
கறிவேப்பிலை சிறிது
ஈனோ பழ உப்பு 1 ஸ்பூன்
செய்முறை:
முதலில் பீட்ரூட்டை சுத்தம் செய்து நறுக்கிக் கொள்ள வேண்டும்.
ஒரு மிக்ஸி ஜாரில் நறுக்கிய பீட்ரூட் சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி நன்றாக விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் அரைத்த பீட்ரூட் விழுதை சேர்த்து அதில் வறுத்த ரவை, தயிர், உப்பு மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக கரைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்து அதில் நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.
அனைத்தும் நன்றாக வதங்கியதும் அதனை கரைத்து வைத்துள்ள கலவையில் சேர்த்து கலக்கவும்.
கடைசியாக இதில் ஈனோ பழ உப்பு சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும்.
இட்லி தட்டில் இந்த கலவையை எடுத்து ஊற்றி, இட்லி தட்டை உள்ளே வைத்து மூடி வேகவைக்கவும்.
நன்றாக ஆவி வரும் வரை வேகவைத்ததும் இட்லி தட்டினை வெளியே எடுத்து சிறிது ஆறவைத்து இட்லிகளை தனியே எடுக்கலாம்.
அவ்வளவுதான் பீட்ரூட் இட்லி ரெசிபி தயார்.