துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் செயலாளர்கள் நியமனம்..!!
துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ள நிலையில் அவருக்கு கீழ் செயல்பட கூடுதல் செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த செப்டம்பர் 28ம் தேதி இளைஞர்கள் நலன் மற்றும் விளையாட்டுதுறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பொறுபேற்றார்.. அவருடன் 6 இலக்கா அமைச்சர்கள் பதவி ஏற்றனர்.. துணை முதலமைச்சர்கள் கீழ் செயல்பட உயர்பதவியில் உள்ள செயலாளர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும்.. அதன்படி இன்று செயலாளர்கள் நியமனம் செய்யப்படுள்ளனர்
தமிழக அரசின் உயர்கல்வித்துறை செயலாளராக இருந்த பிரதீப் யாதவ் ஐஏஎஸ் தற்போது உதயநிதியின் தனி செயலாளராக நியமனம் செய்யபட்டுள்ளார்.. இதனை தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதேபோல் உயர் கல்வித்துறையின் செயலராக கோபால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர்கள் மட்டுமின்றி பல்வேறு துறைகளில் செயலர்களும் ஆணையர்களும் இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
டான்ஜெட்கோ தலைவராக இருந்த ராஜேஷ் லக்கானி வருவாய் துறை நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
“லில்லி ஐஏஎஸ்” சமூக நலத்துறையின் ஆணையராகவும்., ஜவுளித்துறை இயக்குனராக லலிதாவும், நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல்
இந்நாள் வரை தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த சத்தியபிரதா சாகு. இன்று முதல் கால்நடை மற்றும் மீன்வளத்துறையின் செயலாளராக கூடுதல் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல் மின்வாரிய தலைவராக நந்தகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்..
மற்றும் கைத்தறித்துரையின் செயலாளராக அமுதவல்லியை தமிழ்நாடு அரசு நியமனம் செய்துள்ளது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..