தொடரும் வெடிகுண்டு மிரட்டல்..!! இன்று ஒரே நாளில் பரபரப்பான சென்னை, திருச்சி, மதுரை..!!
தனியார் நட்சத்திர ஓட்டலுக்கு மிரட்டல் :
சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது. காவல்துறையினர் மோப்பநாய் உதவியுடன் சோதனை செய்தபோது வெடிகுண்டு சம்பந்தமாக எந்த பொருட்களும் கிடைக்கவில்லை. மேலும் வெடிகுண்டு சம்பந்தமாக தெரிவித்த மர்ம நபரை கிண்டி காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
இதேபோல மதுரை மற்றும் திருச்சியில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மர்ம நபர்கள் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளது குறிப்பிட்த்தக்கது. மேலும் இந்த மின்னஞ்சல் இன்று காலை 7 மணியளவில் வந்துள்ளது. அந்த மின்னஞ்சலில் சுவேதா என்ற பெயரில் வந்துள்ளது.
அதில் உங்கள் கல்லூரியில் மற்றும் பள்ளியில் வெடிகுண்டு வைத்திருக்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த மின்னஞ்சல் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டலை அடுத்து சம்பந்தப்பட்ட பள்ளிகள், கல்லூரியில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டதில் வெடிகுண்டுகள் எங்கும் கண்டறியப்படவில்லை. வெடிகுண்டு மிரட்டல் என்பது புரளி என்பது தெரியவந்தது.
முன்னதாக நேற்று, மதுரையில் உள்ள சின்ன சொக்கிகுளம் பகுதியில் உள்ள பிரபல தங்கும் விடுதி, காளவாசல் பகுதியில் உள்ள தங்கும் விடுதி, பெரியார் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள தங்கும் விடுதி, பெருங்குடி மண்டேலா நகர் பகுதியில் உள்ள அமிக்கா ஆகிய ந்து நான்கு தங்கும் விடுதிகளுக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்துள்ளது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு காவல்துறையினர் சோதனை செய்தனர். சோதனையின் முடிவில் இது வதந்தி என்பது தெரியவந்தது. இதேபோன்று மதுரையில் உள்ள நான்கு பள்ளிகளிலும் மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு இருப்பதாக தகவல் வந்தது, அப்போதும் காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்தனர்.
அந்த சோதனையின் முடிவில் இது வதந்தி என்பது தெரிய வந்தது. .தொடர்ந்து, மின்னஞ்சல் மூலமாக பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள், தங்கும் விடுதிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் மர்ம நபர்களை பிடிக்க காவல்துறையினர் சைபர் கிரைம் உதவியை நாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
– சத்யா
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..