தவெக மாநாடு பந்தக்கால் நிகழ்ச்சி..!! குவிந்த தொண்டர்கள்..!!
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கான பூமி பூஜை மற்றும் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி இன்று அதிகாலை நடைபெற்றது.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டது.., அதற்காக டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தில் கட்சியின் பொதுச் செயலாளரான என்.ஆனந்த் கட்சியை பதிவு செய்தார். அதை தொடர்ந்து கட்சி தொடங்கி ஒரு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் கடந்த மாதம் கட்சியின் கொடியும், கட்சியின் பூவும் வெளியிடப்பட்டு தற்போது முதல் மாநாடும் நடத்தப்படவுள்ளது..
இதற்கிடையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் யானை சின்னம் இடம் பெற்றதற்கு பகுஜன் சமாஜ் கட்சியினர் தங்களுடைய சின்னத்தை பயன் படுத்தியிருப்பதாக கூறி வழக்கு பதிவு செய்தனர் அதற்கு இந்திய தேர்தல் ஆணையம் பதில் அளித்திருந்தது “தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி விவகாரத்தில் தேர்தல் கமிஷன் தலையிடாது. எந்த ஒரு கட்சியின் கொடிக்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் வழங்குவதோ, அங்கீகாரம் வழங்குவது இல்லை. குறிப்பாக கட்சி கொடிகளில் இடம் பெறும் சின்னங்களுக்கு கூட தேர்தல் ஆணையம் ஒப்புதலோ, அங்கீகாரமோ வழங்காது. என பதில் கடிதம் அனுப்பியிருந்தது..
வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதே தங்களுடைய இலக்கு என்ற நோக்கில் தவெக செயல்பட்டு கொண்டு இருக்கிறது., முதலாவதாக மாநில அளவிலான மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளது., அதே சமயம் தவெகவிற்கு பல்வேறு நெருக்கடிகளும் வந்து கொண்டு இருக்கிறது
இந்த மாதம் செப்டம்பர் 27ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெற உள்ளது. இதையடுத்து, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தவெக கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் இந்த மாநாட்டிற்கான பணிகளில் மிகத்தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக பல்வேறு குழுக்களை அமைத்து மாநாடு பணிகளை கவனித்து வருகின்றனர்.
இந்நிலையில், முதல் மாநாட்டிற்கான பூமி பூஜை இன்று காலை பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த தலைமையில் நடைபெற்றது., அதனை தொடர்ந்து பந்தக்கால் நடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
மாநாடு எந்த வித தடையும் இன்றி நடைபெற வேண்டும் என்பதற்காக பல்வேறு மாவட்டங்களில் உள்ள தேவாலயங்கள், மசூதிகள் மற்றும் கோயில்களில் சிறப்பு பூஜை செய்யப்பட்ட புனித நீர் கொண்டுவரப்பட்டு பந்தகாலில் ஊற்றப்பட்டது..
மாநாட்டின் பூமி பூஜைக்கு 1000 – த்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..