இலட்சியத்தோடு முதல் கால் தடம்..!! கலைஞர் எனும் சகாப்தம்-1
படித்ததில் பிடித்தது ஆரம்ப காலத்தில் ஒரு மனிதன் தன்னுடைய சிறு வயதில் ஏதாவது சாதித்து தனகென்று ஒரு அடையாளத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் சென்னைக்கு வந்தார்…
முத்தமிழ் அறிஞ்சர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்கள் 1924ம் ஆண்டு ஜூன் 3-ம் தேதி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருக்குவேலை என்ற சிறிய கிராமத்தில் முத்துவேலர் மற்றும் அஞ்சுகம் அம்மையார் ஆகியோருக்கு மகனாய் பிறந்தார்.
ஆரம்ப காலத்தில் கதைகள் மற்றும் நாடகம் என எழுத ஆரம்பித்தார். அதன் பின் அழகிரி சாமியின் சமூக நலன்கள் குறித்த பேச்சுகளை கேட்டு அரசியலுக்கு வர வேண்டும் என்ற ஆசையோடு அரசியலால் கால் பதித்தார்.
இதுவரை 5 முறை முதல்வராக இருந்து மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்துள்ளார். 1967ம் ஆண்டு எம்.ஜி.ஆர் எதிர்த்து போட்டியிட்டார்., அந்த ஆண்டு ஆட்சியை தொடர்ந்து 1971ம் ஆண்டும் முதல்வராக பதவி வகித்தார். அதன் பின் 1989ம் ஆண்டு ஜெயலலிதா அவர்களை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
1996ம் ஆண்டும் ஜெயலலிதா அவர்களை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2006ம் ஆண்டு பல லட்சம் ஒட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அந்த தேர்தல் சமயங்களில் தன்னுடைய சொத்து விவரங்கள் பற்றிய தகவல்களை ஒரு அறிக்கையில் வெளியிட்டு இருந்தார்…
அதாவது தன்னுடைய கோபாலபுரம் வீட்டைத் தவிர எந்த சொத்தும் வாங்கவில்லை என்றும், லஞ்சம் ஊழலைப் பொறுத்தவரையில், தாம் ஒரு நெருப்பு மாதிரி என்றும் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்
சொத்து விவரம் வெளியிடுவது ஏன்..? தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் அம்மையார் ஜெயலலிதா தொடங்கி, அந்தக் கட்சியிலே உள்ள அடிமட்டத் தொண்டர்கள் வரையிலும் ஏன், தமிழகத்திலே உள்ள வேறுசில கட்சிகளின் நண்பர்கள் ஒரு சிலரும் என்னைப் பற்றி குறிப்பிடும் போது நான் ஏதோ “சல்லிக்காசு” கூட கையிலே இல்லாமல் சென்னைக்கு வந்ததைப் போலவும் இன்றைக்கு ஆசியாவிலேயே முதலாவது பணக்காரனாக இருப்பதாகவும் என் பெயரில் ஏராளமான சொத்துக்களையும், எஸ்டேட்டுகளையும் வாங்கிக் குவித்திருப்பதைப் போலவும் பேசி வருகிறார்கள், எழுதி வருகிறார்கள்.
என்னைப் பொறுத்தவரையில் என்னுடைய சொத்துகள் என்ன என்பதைப் பற்றி குறை கூறுபவர்களுக்கும் அதை நம்பிக் கொண்டிருப்பவர்களுக்கும் ஒரு விளக்கம் அளிக்க வேண்டியது என்னுடைய கடமை என்று கருதுகிறேன்.
என்னதான் அவர்கள் என் குடும்பத்தைப் பற்றி குறைவாக எழுதினாலும், நான் சிசு பருவத்திலே இருந்த போதே, திருடர்கள் வீடு புகுந்து திருட வருகின்ற அளவிற்கும் – உயர்நிலைப் பள்ளியில் படிக்கவே திருவாரூரில் கொண்டு போய் சேர்க்கக் கூடிய அளவிற்கும் ஓரளவு வசதியுள்ள குடும்பம் தான் என்னுடையது.
1967 முதல் 1969 வரை பொதுப்பணித்துறை அமைச்சராகவும், அதன் பின்னர் ஐந்து முறை முதல்வராகவும் இருந்திருக்கிறேன். இந்தியாவிலே உள்ள அனைத்து மாநில முதல்வர்களையும் எடுத்துக்கொண்டால் எல்லா முதல்வர்களுடைய வீடுகளையும் விட வசதி குறைவான எளிமையான வீட்டிலேதான் நான் வாழ்ந்து வருகிறேன் என்பதை வெளிநாட்டிலிருந்து வந்த முக்கிய பிரமுகர்களே நேரில் கண்டு வியப்பு தெரிவித்துள்ளனர்.
செய்தியாளர்களைச் சந்திக்கக் கூட இடம் இல்லாத அளவிற்கு அவர்களே மிகுந்த சிரமத்திற்கு ஆளாகக்கூடிய வகையிலே உள்ள வீட்டிலேதான் இன்றளவும் வாழ்ந்து வருகிறேன். ஒவ்வொரு முறை முதல் அமைச்சராக நான் தேர்ந்தெடுக்கப்படும் போதும் பொதுப்பணித்துறை அமைச்சராக பதவியேற்போர்..
தம்பி துரைமுருகன் போன்றவர்கள் அரசு சார்பில் உள்ள வீடுகள் ஒன்றில் நான் தங்க வேண்டுமென்று கேட்டு அழைத்துச் சென்றும் காட்டியிருக்கிறார்கள். எனினும் நான் தங்கி வந்த அதே “ஸ்ட்ரீட் வீடு” என்பார்களே, அதாவது தெருவில் வரிசையாக உள்ள வீடுகளில் உள்ள ஒரு வீட்டிலேதான் வசித்து வருகிறேன்.
இந்த வீடு கூட நான் அமைச்சராக ஆவதற்கு முன்பு 45 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிய வீடுதான். அந்த வீட்டிலே ஒரு சில மாற்றங்கள் உதவியாளர்களின் வசதிக்காக செய்யப்பட்டிருக்கலாம். என் பிள்ளைகள் எல்லாம் கூட திருமணம் ஆகும் வரைதான் இந்த வீட்டிலே இருந்தார்கள். அதற்குப் பிறகு இந்த வீட்டிலே இடம் இல்லாமல் அவர்களே சொந்தத்தில் வீடு வாங்கிக் கொண்டு சென்றிருக்கிறார்கள்.
ஆசியாவிலேயே பெரிய கோடீஸ்வரன் :
என்னிடம் செய்திகளைச் சேகரிக்க வரும் பத்திரிகையாளர்கள் இந்த வீட்டிலே என்னைச் சந்திக்கும் போது எவ்வளவு இன்னலுக்கு நெரிசல் காரணமாக ஆளாகிறார்கள் என்பதை அவர்களே சொல்லியிருகிறார்கள்.. ஆனால் அந்தப் பத்திரிகையாளர்கள் கூட நான் இத்தனை ஆண்டுக் காலம் இத்தனைப் பொறுப்புகளிலே இருந்தும் கூட, இவ்வளவு எளிமையாக இதே வீட்டில் வாழ்கிறேன் என்பதைப் பற்றி அவர்களே அதை உணர்ந்திருந்த நிலையிலும் அதைப் பற்றி எழுதாமல், அதிலேயும் ஒரு சிலர் என்னைப் பற்றி அவதூறாக நான் பணக்காரன் என்று எதிர்தரப்பினர் விமர்சனம் செய்வதை எழுதும்போது – அவர்கள் கூட அதை நம்புகிறார்களா என்ற வேதனை என் மனதிலே தோன்றாமல் இருப்பதில்லை.
நான் இத்தனை பொறுப்புகளையும் என்னுடைய 87 வயதிற்குள் பார்த்திருக்கிறேன் என்ற போதிலும் சென்னையில் உள்ள இந்த ஒரு வீட்டைத் தவிர வேறு பெரிய வீடுகளையோ, தோட்டங்களையோ, எஸ்டேட்டுகளையோ விலைக்கு வாங்கியதும் இல்லை. அரசு நிலங்களை ஆக்கிரமித்துக் கொண்டதும் இல்லை. குறைந்த விலைக்கு பெற்றுக்கொண்டதும் இல்லை. ஆனால் என்னை ஆசியாவிலேயே பெரிய கோடீஸ்வரன் என்றெல்லாம் பேசுகிறார்கள், எழுதுகிறார்கள்.
ஆசியாவிலேயே மிகப்பெரிய கோடிஸ்வரன் ஏன் தமிழ்நாட்டில் இருக்க வேண்டும் என கேள்வி எழுப்பினார்.., இதுவரை நாம் பார்த்தது அவர் அரசியலில் சந்தித்த முதல் ஒரு பகுதி மட்டும் தான்.., அவரின் அரசியல் வரலாறு பற்றி சொல்ல இந்த ஒரு தொகுப்பு மட்டும் போதாது., எனவே அடுத்த தொகுப்பிலும் இதன் தொடக்கத்தை பார்க்கலாம்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..