தனியார் மையம் ஆகும் இரயில்வே துறை..!! மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பதில்..!!
ரயில்வே துறையை தனியார் மயமாக்கப்படுவதாக செய்திகள் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், இது குறித்து ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.
ரயில்வே பாதுகாப்புப் படையின் 40-ஆவது எழுச்சி தினம், மாபெரும் அணிவகுப்பு மற்றும் கலாசார நிகழ்வுகளுடன் மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் நேற்று கொண்டாடப்பட்டது. அதில் சிறப்பு விருந்தினராக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது
அடுத்த ஐந்தாண்டில் ரயில்வே துறையில் மாற்றம் அடைந்திருக்கும். வந்தே பாரத், நமோ பாரத், ‘கவச்’ ரயில் பாதுகாப்பு திட்டம் போன்றவை செயப்படுத்தப்பட உள்ளது. இந்த மாற்றமானது விபத்துகளை குறைக்க வழிவகுக்கும். இது ரயில்வே துறையில் மாற்றதிற்கான ஒரு சகாப்தம் என சொல்லலாம்.,
இப்படி இருக்கையில் இரயில்வே துறையை தனியார் மயம் ஆக்கப்படும் என்கிற கேள்விக்கே இடமில்லை என சொல்லலாம்.. அதேபோல் அடுத்த 6 ஆண்டுகளில் புதிதாக 3,000 ரயில் சேவைகளை தொடங்க திட்டமிட்டுள்ளோம். இந்திய ரயில்வே பட்ஜெட்டில் இதற்காக 2.5 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 31,000 கி.மீ புதிய ரயில் வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இது பிரான்ஸ் நாட்டில் உள்ள மொத்த இரயில் வழித்தடத்தை விட இது அதிகம் ஆகும்.
மகாராஷ்டிர ரயில்வே திட்டங்களின் மொத்த முதலீடு ரூ. 1.64 லட்சம் கோடி ஆகும். மாநிலத்தில் ரயில்வே பணிகளுக்கு காங்கிரஸ் ஆட்சியின்போது ரூ. 1,171 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. பிரதமர் மோடி ஆட்சியில் ரூ.15,940 கோடியாக ஆக உயர்ந்துள்ளது. புல்லட் ரயில் பிரிவுக்கு ரூ.33,000 கோடியும், பிரத்யேக சரக்கு ரயில் வழித்தடத்துக்கு ரூ.12,500 கோடியும் மகாராஷ்டிரத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
ரயில்வே மற்றும் பாதுகாப்பு ஆகிய இரண்டு துறைகளும் ஒரு நாட்டின் முதுகெலும்புகள் எனவும் அதை வைத்து அரசியல் செய்யக் கூடாது எனவும்., இவ்விதமான வதந்திகளை பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் திட்டவட்டமாக தெரிவித்தார்
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..