23,300 கோடி மதிப்பிலான நலத் திட்டங்கள்..!! பிரதமர் மோடி துவக்கம்..!! 9.4 கோடி விவசாயிகள் பயன்..!!
மகாராஷ்டிரா மாநிலத்தில் திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்துள்ளார். பிரதமர் மோடி ஒரு நாள் சுற்றுப்பயணமாக மராட்டிய மாநிலத்திற்கு சென்றுள்ளார். அதன் பின்னர் இன்று காலை நாண்டெட் வந்தடைந்தார், அதன் பின்னர் அங்கிருந்து அவருக்கு தனி ஹெலிகாப்டர் மூலம் வாஷிம் பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டார்..
அதனை தொடர்ந்து ஜகதாம்பா மாதா கோவிலில் சிறப்பு தரிசனத்தை முடித்து விட்டு சந்த் சேவலால் மகாராஜ் மற்றும் சந்த் ராமாராவ் மகாராஜ் ஆகியோரின் நினைவிடங்களுக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். அதனை தொடர்ந்து பஞ்சாரா சமூகத்தினரின் பெருமைகளை பறைசாற்றும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள பஞ்சாரா விராசத்த் அருங்காட்சியகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
அப்போது பிரதமர் மோடிக்காக நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது., அதில் பங்கேற்று பேசிய அவர்., பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் 20,000 கோடி ரூபாய் நிதியை 9.4 கோடி விவசாயிகளுக்கு விடுத்தார்.
இந்த திட்டத்தின் மூலம் இதுவரை மொத்தம் 3.45 லட்சம் கோடி ரூபாய் வரை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு இருப்பதாக அரசு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.. “பிரதம மந்திரி கிசான் சம்மான்” திட்டம் மட்டுமின்றி “நமோ ஷேத்காரி மகாசன்மன் நிதி யோஜனா” திட்டத்தினையும் அறிமுகப்படுத்தினார்..
இந்த திட்டத்தின் மூலம் விவாசாயிகளுக்காக 2,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.. மேலும் ரூ.1,920 கோடி மதிப்பிலான 7,500-க்கும் மேற்பட்ட விவசாய உள்கட்டமைப்பு திட்டங்களையும் பிரதமர் மோடி துவங்கி வைத்தார். இதனால் பல லட்சம் விவசாயிகள் பலன் அடைந்துள்ளனர்..
அதோடு 9,200 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை (FPOs) பிரதமர் தொடங்கி வைத்தார். இதன் மொத்த வருவாய் சுமார் 1,300 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய நிகழ்ச்சியில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்புத் துறைகள் தொடர்பான ரூ.23,300 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார்.
மேலும் மராட்டிய மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள மொத்தம் 19 மெகாவாட் திறன் கொண்ட 5 சோலார் பூங்காக்களை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியின்போது, மராட்டிய அரசின் பெண்களுக்கான நிதி உதவி திட்டத்தில் பயன்பெற்ற பயனாளிகளை பிரதமர் மோடி கவுரவித்தார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..