“நான் தமிழ் பொண்ணு தான்..” குட்டி குஷ்பூவின் பேச்சுக்கு குவியும் லைக்ஸ்..!!
நடிகை ஹன்சிகா மோத்வானி இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர். ரோமியோ ஜூலியட், அரண்மனை படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர். தொடர்ந்து ஹன்சிகாவிற்கு பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் திருமணம் செய்து கொண்டு செட்டிலானார்.
ஆனாலும் திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் இவர் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் இன்றைய தினம் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஹன்சிகா சாமி தரிசனம் செய்துள்ளார். இதன் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளன.
நடிகை ஹன்சிகா மோத்வானி தமிழ். தெலுங்கு மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் பிஸியாக நடித்தவர். தனுஷுடன் மாப்பிள்ளை படத்தின்மூலம் கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்த இவர் தொடர்ந்து விஜய், ஜெயம் ரவி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து ரோமியோ ஜூலியட், வேலாயுதம், அரண்மனை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
குட்டி குஷ்பூ என்று கோலிவுட் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஹன்சிகா, மை 3 உள்ளிட்ட வெப் தொடர்களிலும் நடித்துள்ளார். தொடர்ந்து பிசியாக நடித்துவந்த ஹன்சிகாவிற்கு கடந்த சிலமாதங்களாக பட வாய்ப்புகள் குறைந்துள்ளன.
தற்போது ரவுடி பேபி, காந்தாரி உள்ளிட்ட படங்களில் நடித்துவரும் ஹன்சிகா, தெலுங்கில் ஒரு வெப் தொடரில் நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பக்கங்களில் அடுத்தடுத்து வீடியோக்களையும் புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில் இன்றைய தினம் இவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு விசிட் செய்துள்ளார். அங்கு மீனாட்சியம்மன் சன்னதி, சுந்தரேஸ்வரன் சன்னதி ஆகியவற்றில் சாமி தரிசனம் செய்துள்ளார். தொடர்ந்து வெளியில் வந்து செய்தியாளர்களிடமும் பேசியுள்ளார்.
மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் :
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தது மகிழ்ச்சி அளிப்பதாக அவர் கூறியுள்ளார். அவருடன் அவரது அம்மாவும் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். இதன் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ஏராளமான ரசிகர்களின் லைக்ஸ்களை பெற்று வருகிறது.
இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் ஹோட்டலில் சாப்பிடும் வீடியோ ஒன்றையும் ஹன்சிகா பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோவில் தான் மும்பையில் பிறந்திருந்தாலும் மனதளவில் தமிழ் பொண்ணுதான் என்றும் நம்ம ஊர் சாப்பாடு என்றும் அவர் கேப்ஷனில் குறிப்பிட்டுள்ளார். இந்த கேப்ஷனை அவர் தமிழில் பதிவிட்டுள்ளார்.
அவரது இந்த வீடியோ பதிவு ஏராளமான ரசிகர்களை கவர்ந்து லைக்ஸ்களை அள்ளி வருகிறது. இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டு வருபவர் ஹன்சிகா. இவரை இன்ஸ்டாவில் 6.9 மில்லியன் பேர் ஃபாலோ செய்து வருகின்றனர்.
– கவிப்பிரியா
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..