செந்தில் பாலாஜி சொந்த ஊருக்கு பயணம்..!
தனது சொந்த ஊரான கரூருக்கு வருகை தந்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மாவட்ட ஆட்சியர், எஸ்.பி, அரசு அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பணப்பரிமாற்ற தடைச் சட்டம் வழக்கு தொடர்பாக அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி, இந்நிலையில் உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவையடுத்து 15 மாதத்திற்கு பிறகு புழல் சிறையில் இருந்து கடந்த 26-ஆம் தேதி ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இதனையடுத்து செந்தில்பாலாஜி மீண்டும் மின்சாரத் துறை அமைச்சராக பதவி ஏற்றுள்ளார்.
இந்த நிலையில், ஜாமினில் இருந்து வெளியே வந்த அமைச்சர் செந்தில் பாலாஜி முதன்முறையாக சொந்த ஊரான கரூருக்கு வருகை தந்தார்.
அப்போது மாவட்ட ஆட்சியர் தங்கவேல், எஸ்.பி பெரோஸ் கான் அப்துல்லா, அரசுத்துறை அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.