சுவையான கார்ன் புலாவ் ரெசிபி..!
தேவையான பொருட்கள்:
பாஸ்மதி அரிசி 2 கப்
தேங்காய் பால் 4 கப்
ஸ்வீட் கார்ன் 4 கப் வேகவைத்தது
பச்சை பட்டாணி 1 கப்
எண்ணெய் 5 ஸ்பூன்
உப்பு தேவையானது
பிரியாணி இலை 2
பட்டை 1
கிராம்பு 2
நெய் 1 ஸ்பூன்
முந்திரி சிறிது
அரைக்க:
காய்ந்த மிளகாய் 7
பச்சை மிளகாய் 10
கரம் மசாலா 1/2 ஸ்பூன்
புதினா இலை சிறிது
கொத்தமல்லி இலை சிறிது
இஞ்சி 1 துண்டு
பூண்டு 8
தேங்காய் 5 ஸ்பூன்
முந்திரி 20
செய்முறை:
அரிசியை நன்றாக கழுவி நீரை வடித்துக் கொள்ள வேண்டும்.
ஒரு ஃபேனில் நெய் ஊற்றி அதில் அரிசியை சேர்த்து லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிரியாணி இலை, பட்டை, கிராம்பு ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின் அதில் அரைத்த மசாலாவை சேர்த்து வதக்க வேண்டும்.
பின் கார்ன், பச்சை பட்டாணி மற்றும் தேங்காய் பால் ஆகியவற்றை சேர்த்து கொள்ள வேண்டும்.
அடுத்ததாக அரிசி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்துக் கொள்ள வேண்டும்.
பின் குக்கரை மூடி 10 நிமிடங்களுக்கு அடுப்பை சிம்மில் வைத்து வேகவைக்கவும்.
பின் அடுப்பை அணைத்து குக்கரில் ஆவி போனதும் திறந்து வறுத்த முந்திரி சேர்த்து கிளறி விடவும்.
அவ்வளவுதான் சுவையான கார்ன் புலாவ் தயார்.