இலங்கை – ராமேஸ்வரம் 56 கி.மீ.. கடலில் நீந்திவரும் ஆட்டிசம் சிறுவன்..!
சென்னையில் வசித்து வரும் கிருஷ்ணகுமார் என்பவரின் மகன் லக்சய் ஆவார். இவர் இரு ஆட்டிசம் குழந்தையாவார். லக்சய் தனது 10 வயதில் இருந்து சென்னையில் தனியார் நீச்சல் அகாடமி ஒன்றில் நீச்சல் பயிற்சி பெற்றுள்ளார்.
லக்சய் நீச்சலில் நன்றாக பயிற்சி பெற்றிருக்கும் நிலையில் அவரின் பெற்றோர்கள் அதிக நீரோட்டம் நிறைந்த பாக்ஜலசந்தி கடலில் நீந்தவைத்து சாதனை படைக்க விரும்பினார்கள்.
இந்நிலையில் நேற்று ராமேஷ்வரத்தில் இருந்து வாடகை படகில் சிறுவன் லக்சய், அவரின் பெற்றொர், நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் மரிய ரோஜர் ஆகியோர் புறப்பட்டு இலங்கை தலைமன்னார் கடற்கரைக்கு சென்றார்கள்.
அங்கு சென்ற இவர்களை மத்திய மாநில பாதுகாப்பு படைகள் மற்றும் இலங்கை படையினரும் சோதனை செய்து உள்ளே அனுமதித்தார்கள்.
அதற்கு பிறகு நேற்று மாலை 5 மணியளவில் தலைமன்னார் கடற்கரையில் இருந்து லக்சய் அவர்கள் நீந்த துவங்கிய நிலையில் இன்று மாலை 3 மணியளவில் அவர் ராமேஷ்வரம் அக்னி தீர்த்த கடற்கரைக்கு வர இருப்பதாக அவரின் பயிற்சியாளர் சதீஷ் தெரிவித்து இருக்கிறார்.