சபரிமலை ஐயப்பன் கோவில் நடைதிறப்பு தேதி அறிவிப்பு..!! ஸ்பாட் புக்கிங் திட்டம்..?
ஐப்பசி மாத சிறப்பு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் வருகின்ற அக்டோபர் 16-ம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலானது பக்தர்களுக்காக ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் முதல் தை மாதம் வரை திறக்கப்பட்டு இருக்கும்.. அதனை தவிர மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை, பங்குனி உத்திர திருவிழா, ஓணம் போன்ற நாட்களில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் செய்யபடுவது வழக்கம்.
அதன்படி வருகின்ற ஐப்பசி மாதம் முதல் நாளில் நடைதிறக்கப்படும் சபரிமலை கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது., அதாவது இந்த மாதம் 16-ம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும் என அறிவித்துள்ளது.
தந்திரி கண்டரரு பிரம்மதத்தன் ராஜீவரரு தலைமையில், மேல்சாந்தி பி.என்.மகேஷ் கோயில் நடையை திறந்து வைத்து தீபாராதனை காண்பிக்கவுள்ளார். அக்டோபர் 16ம் தேதி திறக்கப்படும் நடையானது வருகின்ற அக்டோபர் 21-ஆம் தேதி இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படும் அதாவது 5 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளது..
அதனை தொடர்ந்து மன்னர் பாலராம வர்ம மகராஜா பிறந்த நாளில் நடைபெறும் விசேஷ பூஜையான சித்திர ஆட்டத் திருநாள் வருகின்ற அக்டோபர் 30-ம் தேதி மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு மறுநாள் அக்டோபர் 31 -ம் தேதி இரவு நடை சாத்தப்படும் என தெரிவித்துள்ளது. அதேபோல் இன்று முதல் பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் ஸ்பாட் புக்கிங் முறை குறித்து இன்று விவாதிக்கப்பட உள்ளது. மண்டல, மகர விளக்கு பூஜைகள் ஆரம்பமாக உள்ளநிலையில், ஸ்பாட் புக்கிங் முறையை தேவஸ்தானம் ரத்து செய்தது. அதற்கு பல தரப்பில் இருந்தும் கண்டனம் எழுந்தநிலையில், பல கட்டுப்பாடுகளுடன் மீண்டும் ஸ்பாட் புக்கிங் முறை கொண்டுவரப்படும் என தெரிகிறது.
திருவனந்தபுரத்தில் உள்ள தேவசம் போர்டு தலைமை அலுவலகத்தில் தலைவர் பி.எஸ்.பிரசாந்த் தலைமையில் இன்று நடைபெறும் சபரிமலை ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு இறுதி முடிவு தெரியவரும்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..