சென்னைக்கு ஆரஞ்சு அலார்ட்…!! Danzer Zone அறிவிக்கப்பட்ட பகுதிகள்..!! கனமழை பாதிப்பு..?
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் இன்று முதல் இன்னும் 4 நாட்களுக்கு தமிழகத்தில் சில குறிப்பிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது., இந்த ஆண்டு பருவமழை அதிகரிக்கும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில்
வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் பேரிடர்களை கையாளுவதற்கான முன்னெரிச்சை நடவடிக்கைகள் குறித்த பணிகளை தீவிரப்படுத்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
அதேபோல் நாளை மறுநாள் ( அக்டோபர் 13ம் தேதியன்று ) சென்னை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது..
தொடர்ந்து 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் சென்னையில் வெள்ள அபாயம் ஏற்படும் எனவும் சென்னையின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்க அதிக வாய்ப்புகள் இருப்தாகவும் சென்னை மாநில ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக அக்டோபர் 15ம் தேதி சென்னைக்கு ஆரஞ்சு அலார்ட் விடப்பட்டுள்ளது..
கடலில் பலத்த சூறைக்காற்று நொடிக்கு 35 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் அக்டோபர் 14 மற்றும் 15ம் தேதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாமென சென்னை வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதிலும் குறிப்பாக சென்னை., அண்ணாசாலை, கோட்டூர்புரம்., அடையார்., முடிச்சூர்., தாம்பரம்., பாடி வியாசர்பாடி., வில்லிவாக்கம் மற்றும் புழல்., அயனாவரம்., மயிலாப்பூர்., திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த தமிழக அரசு மாநகராட்சிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது…
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..