நடிகர் சிலம்பரசன் நடித்துள்ள பத்து தல திரைப்படம் வெளியாகும் தேதியை அந்த படத்தை இயக்கும் ஸ்டூடியோ கிரீன்ஸ் நிறுவனம் அதிகார்வ பூரவமாக அறிவித்துள்ளது.
நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிப்பதற்கு காம்பாக் கொடுத்துள்ள சிம்பு அவர் நடித்த மாநாடு மற்றும் வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட படங்கள் சிம்புவிற்கு தொடர்ந்து வெற்றியை கொடுத்துள்ளது. அதனை தொடர்ந்து கன்னடாவில் மிக பெரிய வெற்றி பெற்ற முப்தி படத்தை ரீமேக் படமாக உருவாகி வரும் பத்து தல படத்தில் 40 வயது காங்ஸ்டார் மற்றும் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். மேலும், கடந்த எட்டு மாதமாக அந்த படத்தின் படபிடிப்பில் பிஸியாக இருந்த சிம்பு தற்போது அந்த படத்தில் நடித்து முடித்துள்ளார்.
https://twitter.com/StudioGreen2/status/1609059299158032387
இந்நிலையில் அந்த படத்தின் ரிலீஸ் தேதியை அந்த படக்குழு அறிவித்துள்ளது அதில் சிம்பு காரின் மீது அமர்ந்திருக்கும் புகைப்படத்துடன் வரும் மார்ச் மாதத்தில் 30ம் தேதியில் படம் திரையில் வெளியாகும் என்று அறிவித்துள்ளனர். இந்த எதிர்பாராத அறிவிப்பால் சிம்பு ரசிகர்கள் பெரும் உற்சாகமடைந்துள்ளனர். பத்து தல படத்தை நிறைவு சிம்பு அடுத்ததாக கொரோனா குமார் அல்லது சுதா கோங்குரா இயக்கும் படத்தில் நடிப்பதற்கு அதிகம் வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.