புட் பாய்சனிங் பிரச்சனை இதனால தான் ஏற்படுதா..!! நீங்களும் இந்த உணவை சாப்பிட்டு இருக்கீங்களா..?
இப்போது வெளியே உணவகங்களில் சாப்பிடும் பழக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அப்படி வெளியே உணவு சாப்பிடும் போது புட் பாய்சனிங் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இதனால் வயிற்று வலி ஏற்படும் போது மது குடித்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று இணையத்தில் ஒரு தகவல் பரவி வருகிறது.
இது உண்மை தானா இதன் பின்னணி குறித்து நாம் பார்க்கலாம் வாங்க..
வீக் எண்டில் மது குடிப்பது என்பது இப்போது இளைஞர்களிடையே வழக்கமான ஒன்றாகிவிட்டது. இரவு மது குடித்த பிறகு அதிகமாகச் சாப்பிட்டால் ஹேங்கொவர் ஏற்படாது என்று நண்பர்கள் சொல்லிக் கேட்டு இருப்போம்.
ஆனால், இது உண்மை தானா.. நிஜமாகவே மதுக் குடிக்கும் போது அதிகம் சாப்பிட்டால் ஹேங்கொவர் குறையுமா என்று கேட்டால்.. அது உண்மை இல்லை என்பதே பதில். மது குடித்துவிட்டு சாப்பாடு அதிகம் சாப்பிட்டால் ஹேங்கொவர் ஏற்படாது என்பதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
இதற்கிடையே இப்போது இணையத்தில் மற்றொரு விஷயம் வேகமாகப் பரவி வருகிறது. அதாவது புட் பாய்சன் காரணமாக வயிற்று வலி ஏற்பட்டும் போது மது குடித்தால் வயிற்று வலி பறந்து போகுமாம். இதை இப்போது பலரும் முயற்ச்சி செய்து பார்க்கிறார்கள்.
இதாவது உண்மை தானா..? இல்லை மது குடிக்க இளைஞர்கள் கண்டுபிடித்த காரணமாக இது என்பது குறித்து நாம் பார்க்கலாம்
இது குறித்து காஸ்ட்ரோஎன்டாலஜி மருத்துவர் கூறுகையில், “மோசமான உணவை ஏற்பட்டு புட் பாய்சன் ஏற்படும் போது மது அருந்தினால் அது சரியாகிவிடும் என்ற கருத்து இங்குப் பரவலாக இருக்கிறது.
வெளியே சென்று வந்தால் நாம் உபயோகிக்கும் சானிடைசரில் ஆல்கஹால் இருக்கிறது. அதுவே பாக்டீரியாக்களைக் கொல்கிறது என்றால் மதுவும் நிச்சயம் பாக்டீரியாக்களை கொல்லும் என்பதால் சிலர் இதைச் செய்கிறார்கள்.
ஆனால், இதுபோல எல்லாம் நடக்காது. ஏனென்றால் நாம் உணவைச் சாப்பிட்ட உடன் அது வயிற்றுக்குச் சென்றுவிடும். அங்கு வயிற்றில் நிலவும் சூழல் முற்றிலும் வேறு.. இங்கு வெளியே பாக்டீரியாக்களை ஆல்கஹால் அழிக்கிறது தான். ஆனால், வயிற்றுக்குள் அப்படி நடக்காது. புட் பாய்சனை ஏற்படுத்தும் நோய்க்கிருமிகளை இதன் மூலம் எல்லாம் அழிக்க முடியாது.
உண்மை சொல்லப் போனால் உடம்பு நன்றாக இல்லாத போது மது குடித்தால் அது உடலில் ஏற்பட்ட பாதிப்பை மோசமாகவே மாறும். மது குடித்தால் வயிற்று வலி அல்லது புட் பாய்சனிங் குறையும் என்பதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை.
எனவே இதையெல்லாம் செய்து பார்க்காதீர்கள். மேலும் சானிடைசரில் இருக்கும் ஆல்கஹால் வேறு. நாம் குடிக்கும் மதுவில் இருக்கும் ஆல்கஹால் வேறு. மேலும், ஆல்கஹால் நமது இரைப்பைக் குழாயை எரிச்சலடையச் செய்யும். இதனால் குமட்டல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகளை அதிகரிக்கவே செய்யும்” என்றார்.
எனவே, திடீரென உடல்நிலை பாதிப்பு எதாவது ஏற்பட்டால் மருத்துவரைச் சென்று பாருங்கள். அதைவிட்டுவிட்டு மது குடிக்கிறேன், வீட்டு வைத்தியம் பார்க்கிறேன் என்று விபரீதங்களைத் தேடிப் போக வேண்டும்.
மேலும், வெளியே சாப்பிடப் போகும் போது நன்கு சமைக்கப்பட்ட உணவுகளை மட்டுமே சாப்பிடுங்கள். ஹாஃப் பாயில் போன்ற உணவுகளை முழுமையாகத் தவிருங்கள். சாப்பிடும் முன்பு கை கழுவுவது போன்ற அடிப்படை விஷயங்களைப் பின்பற்றினாலே இதை எல்லாம் நாம் தடுக்கலாம்.
– கவிப்பிரியா
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..