சுவையான பாலக்கீரை சப்பாத்தி ரெசிபி..!
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு 2 கப்
பாலக்கீரை 200 கிராம்
ஓமம் 1/4 ஸ்பூன்
எண்ணெய் 6 தேவையானது
பெருங்காயத்தூள் 1/4 ஸ்பூன்
உப்பு தேவையானது
செய்முறை:
முதலில் பாலக்கீரையை நன்றாக நீரில் இரண்டு மூன்று முறை கழுவி பின் நீரை வடிக்கட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி சூடானதும் அதில் சுத்தம் செய்து வைத்துள்ள பாலக்கீரையை சேர்த்து 5 நிமிடங்களுக்கு வேகவைக்க வேண்டும்.
பின் நீரை வடிக்கட்டி கீரையை ஆறவைக்க வேண்டும்.
ஒரு மிக்ஸி ஜாரில் வேகவைத்த கீரையை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு அகலமான பாத்திரத்தில் கோதுமை மாவி, ஓமம், உப்பு பெருங்காயத்தூள் சேர்த்து கலந்துக் கொள்ள வேண்டும்.
அதில் அரைத்த பாலக் விழுது மற்றும் 2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பின் இதில் தேவையான அளவு தண்ணீர் தெளித்து நன்றாக ஸ்மூத்தாக பிசைந்துக் கொள்ள வேண்டும்.
பின் இதனை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.
பின் இந்த உருண்டைகளை தேவையான வடிவில் தட்டிக் கொள்ள வேண்டும்.
ஒரு தவாவில் சப்பாத்தியை சேர்த்து அதில் எண்ணெய் தடவி வெந்ததும் மறுபக்கம் திருப்பிப்போட்டு எண்ணெய் தடவி வேகவைத்து எடுக்கவும்.
இதுபோலவே மற்ற சப்பாத்திகளையும் சுட்டு எடிக்கவும்.
அவ்வளவுதான் சுவையான பாலக்கீரை சப்பாத்தி தயார்.