மாவிலையால் நடந்த மர்டர்..!! விசாரணையில் வெளிவந்த பல திடுக்கிடும் தகவல்..!! பரபரப்பான திருவண்ணாமலை…!!
ஆயுத பூஜைக்காக மா இலை பறிக்கச் சென்ற போது ஏற்பட்ட வாக்குவாத்தில் முதியவரை கொலை செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த வெள்ளிகிழமை மற்றும் சனிக்கிழமை நாட்களில் ஆயுதபூஜையானது கொண்டாடப்பட்டது.. அப்படியாக இந்துக்கள் பலரும் தங்கள் வீடுகள் மற்றும் அலுவலங்களில் பொறி மற்றும் இனிப்புகளை வைத்து பூஜை செய்வது வழக்கம் அப்படி பூஜைக்காக மாவிலை பறிக்க சென்ற முதியவருக்கு நேர்ந்த கொடுரம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
திருவண்ணாமலை மாவட்டம் அண்ணாமலையார் மலையின் மீது உள்ள முலைப்பால் தீர்த்தம் பகுதியில் சடை சாமி ஆசிரமத்தில் பிரசாந்த் என்ற 29 வயது இளைஞர் வேலை செய்து வருகிறார். அதே பகுதியில் உள்ள பூண்டி ஆசிரமத்தில் மாணிக்கம் என்ற எழுபது வயது முதியவர் தனது மனைவியுடன் தங்கி வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் முலைப்பால் ஆசிரமம் பகுதியில் உள்ள மாமரத்தில் ஆயுதபூஜைக்கு மாவிலையை பறிப்பது தொடர்பாக மாணிக்கம் மற்றும் பிரசாந்த் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது..
இந்த வாக்குவாத்தின் போது கீழே இருந்த செங்கலின் மீது விழுந்த மாணிக்கம் படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் பிரசாந்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாவிலை பரிபதற்காக சென்ற முதியவர் கொலை செய்யப்பட்டு உயிர் இழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..