இளம் வயதினருக்கு மாரடைப்பு வருவதற்கு முன்பு தோன்றும் அறிகுறிகள்..!!
முன்பு இதய நோயானது வயதானவர்களிடம் தான் காணப்பட்டது ஆனால் தற்போது வயது குறைவானவர்களையும் இதய நோயானது குறிவைக்கிறது. தற்போதைய இறப்பு எண்ணிக்கையில் ஏராளமானோர் மாரடைப்பு காரணமாகத்தான் இறப்பதாக உலக சுகாதார நிறுவனமானது கூறுகிறது.
மாரடைப்பானது ஆரோக்கியமில்லாத வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்க வழக்கங்களால் தான் வருகிறது. ஆனால் இத்தகைய மாரடைப்பு வருவதற்கு ஒரு நாட்களுக்கு முன்பே சில அறிகுறிகள் காட்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
அத்தகைய அறிகுறிகளை நீங்கள் கூர்ந்து கவனித்து மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்க்கொண்டால் அத்தகைய பாதிப்பில் இருந்து விடுபடலாம் என சொல்லப்படுகிறது. அத்தகை அறிகுறிகள் சிலவற்றை இப்போது பார்க்கலாம்.
அதிகமான வியர்வை:
வழக்கமான வியர்வை இல்லாமல் அதிகமாக வியர்த்தாலும், எந்தவொரு வேலையிலும் இல்லாமலும் அதிக மூச்சுத்திணறல் உண்டானாலும் அது வரப்போகும் மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம். இப்படி ஏதேனும் தென்பட்டால் அலட்சியமாக இல்லாமல் உகந்த சிகிச்சை எடுப்பது மிகவும் அவசியம்.
தோள்பட்டை மற்றும் கழுத்தில் வலி:
இளம் பெண்களுக்கு கழுத்து மற்றும் தோள்பட்டை, தாடை ஆகிய இடத்தில் தான் நெஞ்சு வலியின் போது அதிக வலி ஏற்படும். இப்படி ஏதேனும் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
நெஞ்சு இறுக்கம்:
திடீரென நெஞ்சு பகுதிகளில் வலி மற்றும் இறுக்கம் என்பது இருந்தால் அதுவும் மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்.
கையில் கூர்மையான வலி:
சிலருக்கு வலியானது கையில் இருந்து தொடங்கி மிகவும் கூர்மையான வலியை கொடுக்கும், இது கையில் இருந்து தாடை, கழுத்து பகுதிக்கு பரவிக் கொண்டிருக்கும். இவையும் மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்.