இன்னிக்கு புதுசா ஒரு டிபன் ரெசிபி..!
தேவையான பொருட்கள்:
* ரவை – 1 கப்
* புளிக்காத தயிர் – 1 கப்
* தண்ணீர் – 1 கப்
* உப்பு – சுவைக்கேற்ப
* ஆப்ப சோடா – 1 சிட்டிகை
மசாலா செய்ய:
* எண்ணெய் – 2 டீஸ்பூன்
* கடுகு – 1/2 டீஸ்பூன்
* சீரகம் – 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை – 1 கொத்து (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1/2 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் – 1
* மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
* மல்லித்தூள் – 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
* சீரகத் தூள் – 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா – 1/4 டீஸ்பூன்
* வேக வைத்த உருளைக்கிழங்கு – 2 (துருவியது)
* கொத்தமல்லி – சிறிது (பொடியாக நறுக்கியது)
* உப்பு – சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு:
* எண்ணெய் – 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் – 1/4 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
* உப்பு – சிறிது
* கொத்தமல்லி – சிறிது
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் ஒரு கப் ரவை எடுத்துக் கொண்டு அதில் ஒரு தயிர் சேர்த்து கலந்துக் கொள்ள வேண்டும்.
பின் அதில் ஒரு கப் தண்ணீர் கலந்து பாத்திரத்தை மூடி 15 நிமிடங்களுக்கு ஊற வைக்க வேண்டும்.
ஒரு வாணலை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, சீரகம் சேர்த்து பொரித்துக் கொள்ள வேண்டும்.
பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.
பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்க வேண்டும்.
அடுத்தது மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலா தூள் சேர்த்து வதக்க வேண்டும்.
இதில் வேகவைத்து துருவிய உருளைக்கிழங்கு மற்றும் உப்பு சேர்த்து கிளறி விட்டு ஆறவைக்க வேண்டும்.
பின் இந்த மசாலாவை சிறிது சிறிதாக எடுத்து டம்ளர் வடிவில் உருட்டிக் கொள்ள வேண்டும்.
ஊறவைத்த ரவையில் உப்பு மற்றும் சிட்டிகை ஆப்ப சோடா கலந்து விட வேண்டும்.
ஒரு டம்ளரில் எண்ணெய் தடவி அதில் பாதி அளவில் ரவையை ஊற்றி அதன் மேல் உருளைக்கிழங்கு மசாலாவை சிறிது வைத்து அதன் மேலே சிறிது ரவையை ஊற்றி மூடிக் கொள்ள வேண்டும்.
இதுபோல மற்ற டம்ளரிலும் நிரப்பி கொள்ள வேண்டும்.
ஒரு இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடானதும் அதில் டம்ளரை வைத்து பாத்திரத்தை மூடி இட்லி வேகவைப்பது போல் பதினைந்து நிமிடங்களுக்கு வேகவைக்க வேண்டும்.
பின் டம்ளரை வெளியே எடுத்து முனைகளில் கத்தியால் கிளறிவிட்டு கவுத்துப்போட்டு தட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு ஃபேனை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு மற்றும் கொத்தமல்லி இலைகளை போட்டு அதில் வேகவைத்த இட்லிகளை போட்டு கிளறி விட்டு இறக்க வேண்டும்.
அவ்வளவுதான் சுவையான மசாலா இட்லி தயார்.