குறிப்பிட்ட 3 ராசிக்காரர்களுக்கு மட்டும் அதிஷ்டம்…!! குருபகவான் பார்வை இவர்கள் மீதா..?
வேத ஜோதிடத்தில் குரு பகவான் மங்களகரமான கிரகமாக கருதப்படுகிறார். ஞானத்தை வழங்குபவரான குரு பகவான் தேவர்களின் குரு ஆவார். கிரகங்களில் குரு ஆண்டிற்கு ஒருமுறை ராசியை மாற்றக்கூடியவர் மற்றும் இவர் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாவார்.
தற்போது ரிஷப ராசியில் பயணித்து வரும் குரு பகவான், அக்டோபர் 09 ஆம் தேதி வக்ரமாகி பின்னோக்கி பயணித்து வருகிறார். 12 ஆண்டுகள் கழித்து ரிஷப ராசியில் வக்ர நிலையில் பயணித்து வரும் குரு பகவான், அடுத்த 119 நாட்கள் வக்ர நிலையில் தான் இருக்கப் போகிறார்.
குரு வக்ரமாக இருப்பதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசித்து, வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார்? என்பதைக் பார்க்கலாம் வாங்க…
ரிஷப ராசியின் முதல் வீட்டில் குரு வக்ரமாகியுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும். பணியிடத்தில் செயல்திறன் சிறப்பாக இருக்கும், மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். திருமணமானவர்களின் திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது
சிம்ம ராசியின் 10 ஆவது வீட்டில் குரு வக்ரமாகியுள்ளார். இதனால் இந்த ராசிக்கார்களுக்கு அடுத்த 119 நாட்கள் நன்றாக இருக்கும். வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வணிகர்கள் நல்ல லாபத்தையும், வெற்றியையும் பெறுவார்கள்.
பணிபுரிபவர்களுக்கு இக்காலத்தில் பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. அதே வேளையில் பணியிடத்தில் உயர் அதிகாரிகள் மற்றும் உடன் வேலை செய்வோரின் ஆதரவு கிடைக்கும். முக்கியமாக நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.
கடக ராசியின் 11 ஆவது வீட்டில் குரு வக்ரமாகியுள்ளார். இதனால் வருமானத்தில் பெருமளவில் உயர்வைக் காண்பீர்கள். சிலர் புதிய வருமான ஆதாரங்களைப் பெறுவர். சிலருக்கு நல்ல நிதி நன்மைகள் கிடைக்கும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். வசதிகள் அதிகரிக்கும். நீண்ட நாள் ஆசைகள் இக்கால கட்டத்தில் நிறைவேறும்.
மதிமுகவில் வெளியாகும் அனைத்து ஆன்மீக பதிவுகளும் முறையாக அதற்குரிய ஆன்மீக நபர்களை தொடர்பு கொண்டு., அவர்கள் சொல்லும் குறிப்புகள் மூலம் வெளியிடப்படுபவையே என இதனை வாசகர்கள் ஆகிய நீங்கள் உங்கள் மன விருப்பப்படி எடுத்துக்கொள்ளலாம்…
– கவிப்பிரியா
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..