கனமழை கொட்டி தீர்த்தாலும் சென்னையில் அந்த பாதிப்பு இல்லை..!! துணை முதலமைச்சர் உதயநிதி பேட்டி..!!
சென்னையில் கனமழை வெளுத்து வாங்கினாலும் எந்த பகுதியிலும் இதுவரை மின்தடை பாதிப்பு ஏற்படவில்லை என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார்.
சென்னையில் நேற்று இரவு முதல் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.. இன்று சென்னைக்கு ஆரஞ்சு அலார்ட் விடப்பட்டுள்ள நிலையில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சியின் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்..
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்., சென்னையில் நேற்று இரவு முதல் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது., தற்போதைய நிலவரப்படி 4.6 செமீ கனமழை பதிவாகியுள்ளது. அதேபோல் சோழிங்கநல்லூர் மற்றும் தண்டையார்பேட்டை பகுதியில் 6.1 செ.மீ கனமழை பெய்துள்ளதாக பதிவாகியுள்ளது.
சென்னையின் புறநகர் பகுதிகளில் வீசிய பலத்த காற்றால் இதுவரையில் 8 மரங்கள் முறிந்து சாலையில் விழுந்துள்ளது. அதனை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.. தற்போது வரை இரண்டு மரங்கள் அகற்றப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது..
300 நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளது. அந்த நிவாரண மையங்களில் குடிநீர், பால், பிரட் பாக்கெட் உள்ளிட்ட அத்தியாவசையப் பொருட்கள் மக்களின் தேவைக்காக வைக்கப்பட்டுள்ளது.. அதேபோல் கணேசபுரம் மற்றும் பெரம்பூர் சுரங்கப்பாதை களை தவிர மற்ற 20 சுரங்கப்பாதைகளிலும் போக்குவரத்து சீராக உள்ளது. அதாவது கடந்த ஆண்டு இந்த சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.. மேலும் கணேசபுரம் மற்றும் பெரம்பூர் சுரங்கப்பாதைகளில் சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது.. இன்னும் ஒரு மணி நேரத்தில் மழைநீர் அகற்றப்படும்..
அதேபோல் சென்னையின் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. நேற்று இரவு முதல் சென்னையில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது., ஆனால் தற்போது வரை எந்த இடங்களிலும் மின்தடை ஏற்படவில்லை..
சென்னையில் 89 படகுகளும் மற்ற மாவட்டங்களில் 130 படகுகளும் தயார் நிலையில் உள்ளது. சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு தற்போது வரை 1,500 புகார்கள் வந்துள்ளது. அதில் 600க்கும் மேற்பட்ட புகார்களை கண்டறிந்து தீர்வு காணப்பட்டுள்ளது.. சென்னையில் மட்டும் 13,000 தன்னார்வலர்களும் தமிழ்நாடு முழுவதும் 65,000 தன்னார்வலர்களும் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.. எனவே பொதுமக்கள் அச்சமின்றி இருக்குமாறு துணை முதலமைச்சர் உதயநிதி கேட்டுகொண்டார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..