வாழைப்பூல கோலா உருண்டையா..?
தேவையான பொருட்கள்:
வாழைப்பூ – 2 கைப்பிடி
பொட்டுக்கடலை – 1/4 கப்
துருவிய தேங்காய் – 1/4 கப்
அரிசி மாவு – 3 டேபிள்ஸ்பூன்
பூண்டு – 3
இஞ்சி – சிறிதளவு
பட்டை, கிராம்பு – 2
சோம்பு – 1/4 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய், வர மிளகாய் – 2
சின்ன வெங்காயம் – 5
பெரிய வெங்காயம் – 1
கொத்தமல்லி இலை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
ஒரு மிக்ஸி ஜாரில் பொட்டுக்கடலையை சேர்த்து மாவு போல அரைத்து தனியே எடுத்து வைக்கவும்.
ஒரு வாணலை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு மற்றும் வரமிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
அதே வாணலில் வாழைப்பூவை சேர்த்து மஞ்சள்தூள் மற்றும் சிறிது தண்ணீர் ஊற்றி கிளறிவிட்டு சிறிது நேரம் வேகவைக்க வேண்டும்.
ஒரு மிக்ஸி ஜாரில் பட்டை, கிராம்பு, சோம்பு ஆகியவற்றை சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதோடு வதக்கி வைத்துள்ள வெங்காயம் கலவை மற்றும் வாழைப்பூவை சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
அரைத்த கலவையுடன் துருவிய தேங்காய், பொட்டுக்கடலை மாவு, அரிசி மாவு, தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
அதோடு பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி இலை ஆகியவற்றை சேர்த்து பிசைந்து உருண்டைகளாக உருட்டி தனியே வைக்கவும்.
ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கோலா உருண்டைகளை போட்டு இருபுறமும் பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
அவ்வளவுதான் சுவையான வாழைப்பூ கோலா உருண்டை தயார்.