உங்கள் ஊர் செய்திகள் உங்கள் பார்வைக்காக …!! களத்தில் மதிமுகம்..!!
கரூரில் நேற்று வீரபாண்டிய கட்டபொம்மனின் 225 வது நினைவு தினத்தை முன்னிட்டு தமிழக முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர் . இதில் ஒரு பகுதியாக கரூர் மாவட்டம் கோடங்கிபட்டியில் அமைந்த சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் திருவுருவ சிலைக்கு, அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கோவை மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக செய்து வரும் கனமழை காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இரண்டாவது நாளாக நொய்யல் ஆற்றல் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் நிலையில் திருப்பூரை அடுத்த மங்கலம் அருகே உள்ள நல்லம்மன் தடுப்பணையில் மழை வெள்ளம் பொங்கி பாய்கிறது. இதனால் பொதுமக்கள் கோவிலுக்குள் செல்ல தடைவிதிக்கப் பட்டிருந்த நிலையில் தற்போது சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது..
வேலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் கால்வாயில் மணல்கள் மூடப்பட்டு இருப்பதால் சிறிது நேரம் மழை பெய்தாலே மழை நீருடன் கழிவுநீர் கலந்து தெருக்களில் ஆறு போல் ஓடுவதால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் மாநகராட்சி ஊழியர்கள் கால்வாய் திட்டை அமைத்து வரும் நிலையில் மிதமான மழை பெய்து கொண்டிருக்கும் பொழுது கால்வாய் பணியில் ஈடுபட்டு வருவது கடமைக்கு வேலை செய்து வருவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.
திருப்பூர் மாவட்டம் இடுவாய் அடுத்த வஞ்சிபாளையம் பகுதியில் ஜீவா – மகாலட்சுமி தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.இந்த நிலையில் வீட்டில் சிலிண்டர் மாற்ற முயன்ற போது ஏற்பட்ட எரிவாயு கசிவு காரணமாக தீ விபத்தில் ஜீவா மற்றும அவரது மகள் கௌசல்யா ஆகிய இருவருக்கும் தீக்காயம் ஏற்ப்பட்டுள்ளது. அருகில் இருந்தவர்கள் பார்த்து உடனடியாக அவர்களை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தர்மபுரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு மரம் போன்று வடிவத்தில் நின்று போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியை நடத்தினர். இதில் மாவட்ட போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர்கள், தன்னார்வலர்கள், மற்றும் கல்லூரி மாணவிகள் என ஏரளமானோர் பங்கேற்றனர்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..