நீங்கள் பார்க்க மறந்த பல முக்கிய செய்திகள்…!! மீண்டும் உங்கள் பார்வைக்காக…!!
கரூர் அமராவதி ஆற்றில் வடகிழக்கு பருவ மழையை எதிர் கொள்ளும் வகையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ,தீயணைப்புத் துறையினர், பேரிடர் தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி மாவட்ட அலுவலர் திருமதி கோமதி தலைமையில் நடைபெற்றது .இதில் 15க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பங்கேற்று மழை வெள்ள காலங்களில் நீர்நிலைகளில் சிக்கிக் கொண்டவர்களை படகு மூலம் எப்படி மீட்பது, குறித்து பல்வேறு ஒத்திகை நிகழ்ச்சி நடைப்பெற்றது.
வடகிழக்கு பருவ மழை முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட பில்லாஞ்சி பகுதியில் இருந்து மழை வெளியேறுவதற்கான கால்வாய் அமைக்கும் பணி ஜேசிபி இயந்திரம் கொண்டு கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை நகராட்சித் தலைவர் தமிழ்ச்செல்வி அசோகன், ஆணையர் கன்னியப்பன், பொறியாளர் ஆசிர்வாதம் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
திருப்பூரில் குமரன் சாலை சுற்றியுள்ள பகுதிகளில் 2 மணி நேரத்திற்கு மேலாக பெய்த தொடர் மழை காரணமாக 60 வருடங்களுக்கு மேலான பழமை வாய்ந்த வேப்ப மரம் அடியோடு சாய்ந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் மரத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.
வேலூர் மாநகராச்சிக்குட்பட்ட அண்ணா கலையரங்கம் அருகே கோட்டை சுற்று வளாகத்தில் உள்ள 30 அடி உயரம் உள்ள பூ மரம் எதிர்பாராத விதமாக மின் கம்பத்தின் மேல் விழுந்தது. உடனடியாக அருகே இருந்தவர்கள் மின் அலுவலகத்திற்கும், தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மரம் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வேலூர் மாவட்டதில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மரம் விழுந்து இரண்டு கார்கள் சேதமடைந்தது. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புணர் கிரேன் மூலம் மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நல்வாய்ப்பாக மக்கள் யாரும் அங்கு இல்லாததால் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது….
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..